“ஆடு மேய்க்குறதுதான் தொழில்!”.. குரூப்-4 தேர்வில் வென்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திருவராஜ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்மையில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில், சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த திருவராஜு என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இளையான்குடி மற்றும் சிவகங்கை நகரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று குரூப் 4 தேர்வு எழுதி முதலிடம் பிடித்துள்ள, 46 வயதான திருவராஜுக்கு, விஜயா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டே, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனிடையே இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, முதலிடம் பிடித்த 35 பேரை நேரில் ஆஜராகுமாறு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி பேசிய திருவராஜ், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த, தான் முதல் முயற்சிலேயே குரூப் 4 தேர்வில் வெற்றி பெறவில்லை என்றும் 7 முறை தேர்வெழுதி தோல்வியடைந்து, பின்னர் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் 8-வது முறையாக தான் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்தேர்வில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “முறைகேடு இருக்குற மாதிரி தெரியுதே?”.. “முதலிடம் பிடிச்ச 35 பேருக்கு..”.. “டிஎன்பிஎஸ்சி போட்ட அதிரடி உத்தரவு!”
- '1 லட்ச ரூபாய் சம்பளத்தில் ஐடி வேலை'... 'உதறிய என்ஜினீயர்' ... முதல் முயற்சியிலேயே சாதனை!
- 'இளைஞர்களே'...'வந்தாச்சு '2020' ஆண்டுக்கான 'TNPSC' தேர்வு அட்டவணை'...மொத்தம் 23 எக்ஸாம்!
- டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் அதிரடி மாற்றங்கள்..! வெளியான புதிய அறிவிப்பு..! விவரம் உள்ளே..!
- ‘டிஎன்பிஎஸ்சி தேர்வில்’... ‘தோனி குறித்த கேள்வி’... 'சமூக வலைத்தளத்தில் வைரல்'!