இரிடியம் பெயரில் 23 லட்ச ரூபாய் மோசடி.. தம்பிக்கே டிமிக்கி கொடுக்க நினைத்த அண்ணன்.. சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரிடியம் வாங்கி விற்பனை செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்ற பெயரில், நடந்த ஏமாற்று வேலை ஒன்றை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது தம்பியின் பெயர் ஆறுமுகம். குருசாமி, தனது தம்பியிடம் இரிடியம் வாங்கி, விற்பனை செய்தால், விரைவில் அதிக லாபம் சம்பாதித்து பெரிய ஆள் ஆகலாம் என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், இரிடியம் வாங்குவதற்கான பணத்தையும் ஆறுமுகத்திடம் ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கிறார் குருசாமி.

இரிடியம் விற்பனை மூலம் லாபத்தில் செழிக்கலாம் என்ற நோக்கில், சில நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் மொத்தம் 23 லட்சத்து 50  ரூபாயை ஆறுமுகம் சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குருசாமியும், ஆறுமுகமும், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு, மதுரையில் இருந்து சிவகங்கைக்கு வந்துள்ளனர். வரும் வழியில், கரும்பாவூர் விலக்கு பகுதியை அடைந்த போது, ஆறுமுகத்தை அங்கே இறக்கி விட்ட அண்ணன் குருசாமி, சாப்பாடு வாங்கி வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

மர்ம கும்பல்

அந்த சமயம் பார்த்து, திடீரென பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல் ஒன்று, ஆறுமுகத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். குருசாமி திரும்ப வந்ததும் பணம் திருடு போன விஷயம் அவருக்கு தெரிய வந்தது. இதனால் பாதரிய அவர், உடனடியாக ஆறுமுகத்தை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் எங்களிடம் இருந்து திருடிச் சென்றதாக புகாரளித்துள்ளார்.

தீவிர விசாரணை

தொடர்ந்து புகாரின் பெயரில், போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் தீவிர விசாரணையில், சொந்த அண்ணனான குருசாமியே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு, தம்பியின் பணத்தைத் திருட திட்டம் போட்டது அம்பலமானது. பைக்கில் மர்ம நபர்கள் போல் வந்து, பணத்தைத் திருடிச் சென்ற குருசாமியின் கூட்டாளிகள் 9 பேரை, போலீசாரை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தனது தம்பியை ஏமாற்றி, சொந்த அண்ணனே கூட்டாளிகளுடன் சேர்ந்து சுமார் 23 லட்சம் ரூபாயை, திருட திட்டம் போட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IRIDIUM, SIVAGANGAI, BROTHER, இரிடியம், மோசடி, சிவகங்கை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்