முந்திரி காட்டில் கிடந்த இளம்பெண் சடலம்.. கனக்கச்சிதமாக ‘மோப்பநாய்’ நின்ற இடம்.. திடுக்கிட வைத்த தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முந்திரி தோப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “டென்சனாதான் இருந்துச்சு.. ஆனா உள்ள இருக்குறது நம்ம தோனி”.. போட்டி முடிஞ்சதும் ஜடேஜா சொன்ன சூப்பர் பதில்..!

புதுக்கோட்டை மாவட்டம் சுதந்திரபுரத்தை சேர்ந்தவர்கள் உதயசூரியன்-புவனேஷ்வரி தம்பதியினர். இவர்களது 28 வயது மகள் சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.  இவர் சில தினங்களுக்கு முன்பு புளியங்குடியிருப்பு பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். ஆனால் இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அப்பெண்ணின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால், காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.

இந்த சூழலில், அப்பகுதியில் உள்ள முந்திரிக்காட்டுக்குள் ஆடைகள் களையப்பட்ட நிலையில் மர்மமான முறையில் சுகன்யா இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து காரைக்குடி டிஎஸ்பி வினோஜி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சிவகங்கையில் இருந்து  வரவழைக்தப்பட்ட மோப்ப நாய் ‘ராம்போ’ முந்திரி காட்டிற்கு வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து நேராக ஊருக்குள் வந்து குறிப்பிட்ட பகுதியில் நாய் நின்றது. இதனை அடுத்து அந்த பகுதியில் அன்றைய தினம் வந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராமையா என்பவரின் மகன் தேவா (வயது 20) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

இதனை அடுத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கோயிலில் சாப்பிட்டு விட்டு வீட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது சுகன்யாவிடம், கஞ்சா போதையில் இருந்த தேவா பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக முந்திரிக்காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப் பெண் சத்தம்போடவே துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளார்.

தலைமறைவானால் சந்தேகம் வந்திடும் என ஊருக்குள் எப்போதும் போலவே சகஜமாக இருந்துள்ளார். ஆனால் மோப்ப நாயால் தேவா சிக்கியுள்ளார். தற்போது அவரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

SIVAGANGA, MENTALLY ILL GIRL, FOREST, MAN, ARREST, இளம் பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்