'10 பேருக்குச் சமைக்க ஒரே பாத்திரம்'... 'தலைமுறை கடந்த ரயிலடுக்கு'... இணையத்தில் ஹிட் அடித்த பாத்திரத்தின் பின்னணி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ரயிலடுக்கு பாத்திரம் ஒன்று வைரலானது. இதன் பின்னணி குறித்து பலரும் அறிந்திராத நிலையில், அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

சிவகங்கையைச் சேர்ந்தவர் மதுரவல்லி. இவரது வீட்டில் 150 ஆண்டுக்கு முந்தைய ரயிலடுக்கு அமைப்பு கொண்ட பித்தளை பாத்திரம் ஒன்று உள்ளது. இந்த பாத்திரத்தை மூன்று தலைமுறையாக இவர்களது குடும்பம் பாதுகாத்து வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

150 ஆண்டுக்கு முந்தைய பாரம்பரியம் கொண்ட இந்த பாத்திரம் 14 பாகங்களைக் கொண்டது. இந்த பாரம்பரிய  பாத்திரத்தை மதுரவல்லி, அவரது தாய், தற்போது மகள் மீரா மருமகள் என மூன்று தலைமுறையாகப்  பொக்கிஷமாக இந்த குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர். இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாது, நடு வயதில் இருப்பவர்களுக்குக் கூட இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

10 பேருக்குத் தேவையான 3 படி அரிசியில்  சாதம் சமைக்கும் பெரிய பாத்திரம், பொரியல், கூட்டு, அவியல் செய்ய என 3 அடுக்கு பாத்திரம், சாதம் வடிக்கும் சிப்பல், குழம்புசட்டி, காபி டவரா, டம்ளர் செட், இலுப்பைச் சட்டி, செம்பு, அரிசி அளவிடும் படி, பித்தளை டம்ளர் உள்ளிட்ட 14 வகையான சிறிய பாத்திரங்கள். இந்த ஒற்றை பாத்திரத்தில் அடங்கியிருப்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். இதுபோன்ற பாரம்பரிய பொருட்கள் நிச்சயம் தலைமுறை கடந்தும் மக்கள் மனதில் என்றும் நிற்கும்.

மற்ற செய்திகள்