"அட, நம்மூர்ல இப்டி ஒரு கிராமமா??.." இந்தியாவுக்கே Example-அ இருக்கும் தமிழக கிராமம்.. "4 வருசமா இத Follow பண்றாங்களாம்.."

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக சிறுதாமூர் என்னும் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | "இது என்ன இப்டி இருக்கு?!.." டைனோசர் அழிஞ்ச இடத்துல கண்டறியப்பட்ட ராட்சத உயிரினம்.. மிரண்டு போன ஆய்வாளர்கள்

இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் விவசாயத்தை தான் பெரிய அளவில் நம்பி வாழ்ந்து வருகின்றனர். பூக்கள், காய்கறி, பழ வகைகள் என பல விஷயங்களை பயிரிட்டு வரும் இந்த கிராம மக்கள், மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இருப்பதால், அனைத்து பிரச்சினைகளுக்கும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய சூழ்நிலை தான் உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தும், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கிராமம் எடுத்து வரும் ஒரு முன்னேற்பாடு, பெரிய அளவில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்றைய தலைமுறை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற முறையிலும், இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்க்கும் விதத்திலும், இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் தினமும் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தும் நிகழ்வை கடந்த நான்கு ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.

அதன்படி, தினந்தோறும் காலை 8:30 மணிக்கு தவறாமல் அப்பகுதியில் தேசிய கொடியை ஏற்றி கொடி கம்பத்திற்கு வீரவணக்கம் செலுத்தி விட்டு, பின்னர் நாட்டுப்பண், தேசிய கீதம் இசைத்து சல்யூட் அடித்து செல்வதையும் இந்த கிராம மக்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதுமட்டுமில்லாமல், தினந்தோறும் கொடி கம்பத்திற்கு அருகே கோலமிட்டு, அப்பகுதியை சுத்தம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல, தினமும் காலையில் தேசிய கீதம் ஒலிக்கப்படும் நேரத்தில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் விவசாயிகள் மற்றும் கூலியாட்கள் அனைவரும், தங்களது பணிகளை நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யவும் தவற விடுவதில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அந்த கிராம மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தேசியப் பற்றை வளர்ப்பதற்காக தினமும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 75 ஆவது சுதந்திர தின விழா, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சிறுதாமூர் கிராமம் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

Also Read | "லீவு மட்டும் வேணாம் ப்ளீஸ்.." கலெக்டருக்கு சிறுமி வைத்த கோரிக்கை.. வைரல் பின்னணி..

SIRUDAMUR VILLAGE, PEOPLE, HOISTING FLAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்