இயற்கை உபாதைக்கு சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.. சீர்காழி அருகே விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அவசர அவசரமாக லிஃப்டில் ஏறிய நபர்.. அதற்குள் வேகமாக மூடிய கதவு.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் (வயது 21). இவர் சீர்காழியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த சூழலில் நேற்று இயற்கை உபாதை கழிப்பதற்கு வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் அபிமணி நடந்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை அபிமணி மிதித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அபிமணியை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து போலீசார் மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இயற்கை உபாதை கழிக்க சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

SIRKAZHI, COLLEGE STUDENT, ELECTROCUTED, சீர்காழி, இளைஞர், கல்லூரி மாணவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்