“தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேக்குறவங்க தான் துணிச்சலானவங்க!” - ‘மன்னிப்பு கேட்டார் குஷ்பு’.. வைரல் ஆகும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அண்மையில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு, குடியரசு தினத்துக்கு தனது வாழ்த்தினை ட்வீட்டக இன்று பதிவிட்டார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு அரசியல், சமூக தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துக்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து வந்தனர்.  இந்நில்லையில் நடிகை குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த மற்றும் பெருமைமிகு குடியரசு தின நல்வாழ்த்துகள்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவின் முடிவில், ஜெய்ஹிந்த் என்று ஹேஷ்டேக் போட்டு, அதனுடன் இந்திய நாட்டின் தேசியக்கொடிக்கு பதிலாக தவறுதலாக மேற்கு ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டுக்கொடியை பதிவிட்டார்.  இந்த பதிவு சர்ச்சையானதை அடுத்து அதை கவனித்து திருத்திக் கொண்ட குஷ்பு, குடியரசு தின வாழ்த்தில் தேசியக் கொடியை மாற்றி பதிவிட்டதற்காக, தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அதன்படி, குடியரசு தினத்தை முன்னிட்டு தாம் தெரிவித்த வாழ்த்தில் தவறான கொடியை ட்வீட் செய்ததற்காக மன்னிப்பு கோருவதாகவும், இந்த ட்வீட்டை பதிவிட்டு பகிர்வதற்கு முன், மூக்குக் கண்ணாடியை அணியாததற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: 'திடீரென்று மூடிய வங்கி லாக்கர் கதவு!'.. ‘திக் திக் நிமிடங்களில் உறைந்த தாசில்தார்!’.. கடைசியில் காப்பாற்றியது ‘இதுதான்!’

அத்துடன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பவரே துணிச்சலானவர் என்றும் சேர்த்து ட்வீட் பதிவிட்டுள்ளார். 

மேலும் இந்த நியாயம் ஏற்புடையதல்ல என்பது தனக்கு தெரியும் என்றும் எனினும் தன்னை மன்னிக்க இயன்றால் மன்னிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்