"இப்படி ஒரு மோசமான".. மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? நடிகர் சித்தார்த் முழு விளக்கம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய சினிமாவில் பிரபல நடிகனாக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.

Advertising
>
Advertising

Also Read | விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!!   

நடிகர் சித்தார்த், பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகிர்தண்டா, தீயா வேலை செய்யனும் குமாரு, காவியத்தலைவன், சிவப்பு மஞ்சள் பச்சை, ரங்தே பசந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த் & அவரின் பெற்றோர்களை விமான நிலையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப் வீரர்கள் துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த்  பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘கூட்டமில்லாத மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் எங்களை CRPF வீரர்கள் துன்புறுத்தினர்.

என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்து நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள். அவர்களிடம் நாங்கள் ஆங்கிலத்தில் பேச சொன்னபோதும்  அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் பேசினார்கள்.

இதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது "இங்கு இப்படி தான் இருக்கும்" என்று கூறினர்.  வேலையில்லாதவர்கள்  அதிகாரத்தை காட்டுகிறார்கள்’’ என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார்.

சித்தார்த்தின் இந்தப் பதிவு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்." என்று ட்வீட் செய்தார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து சித்தார்த் விளக்கமாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்,“மதுரை விமான நிலைய சம்பவத்துக்கு பின்னர்,  பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு தங்கள் அனுபவங்களை  பகிர்ந்து வருகின்றனர். பல்வேறு மீடியாக்களும் என்னைத் தொடர்புகொண்டு வருகின்றன. எனது அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். என் மீது கவனக் குவிப்பு செய்வதை விட இந்த விவகாரத்தின் மீது கவனக் குவிப்பு செய்ய நினைக்கிறேன். தேவையில்லாத கவனக் குவிப்பு என் குடும்பத்தினரை இன்னும் வருத்தம் அடையச் செய்யும்.

மதுரை விமான நிலையத்திற்கு இதற்கு முன் பலமுறை சென்றுள்ளேன். ஆனால், இதுவரை இப்படி ஓர் மோசமான சூழலை எதிர்கொண்டதில்லை.

மூன்று முதியவர்கள், இரண்டு குழந்தைகள் உட்பட எனது குடும்பத்தினருடன் நான் மதுரை சென்றேன். விமான நிலையத்தில் கூட்டம் இல்லாததால் போர்டிங் நேரத்திற்கு முன்பே பாதுகாப்பு  செயல்முறைகளை முடிக்கச் சென்றோம்.

பாதுகாப்பு வரிசையில் பயணிகள் இல்லை. அந்த நேரத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்திருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையைச் சேர்ந்த நபர், குழந்தைகளின் பாஸ்போர்ட் உட்பட எங்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, எனது முகத்தையும் ஆதார் அட்டையிலிருந்த என் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு ‘ இது நீங்களா?’ என்று இந்தியில் கேட்டார்.

"நான்தான் அது என்றும் ஏன் இப்படிக் கேட்டீர்கள்?" என்று அவரிடம் பதில் அளித்தேன். உடனே அவர் "சந்தேகம் இருப்பதாக" பதில் கூறினார்.

பின்னர், அடுத்த நபர், "இந்தி புரியுமில்ல? " என்று கேட்டு, எங்களின் ஐபாட், ஐஃபோன் ஆகியவற்றை வெளியே எடுத்து வீசினார். பின்னர், எனது இயர்போனை எடுத்து வெளியே வீசினார். ஏற்கெனவே விமான நிலையங்களில், இயர்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை திருட்டு சம்பவம் காரணமாக இழந்துள்ளதால், அவற்றை வீச வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு "இது மதுரை  இது தான் விதிமுறைகள்" என்றார்.

முதியவர்கள் இருப்பதால் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன். பின்னர், அவர்கள் எனது அம்மாவின் பர்ஸை  எடுத்து அதில் நாணயங்கள் உள்ளதா என்று கேட்டு அவற்றையெல்லாம் வெளியே எடுக்கும்படி கூறினர்.

நாணயங்கள் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவை. ஸ்கேனர் கருவியில் அவை தெளிவாகத் தெரியும் என்பதால், ஏன் அவற்றை வெளியே எடுக்க வேண்டும் என்றும் நான் அவர்களிடம் கேட்டேன். "நாங்கள் எதை அகற்றக் கூறுகிறோமோ அதை அகற்ற வேண்டும். அதுதான் இந்தியாவில் விதி" என்று அவர்கள் பதில் அளித்தனர்.

"70 வயதைக் கடந்த முதியவரிடம் இவ்வாறு கூறுவது சரியில்லை என்று ஏதாவது தவறு நடந்து விட்டதா?, ஏன் இப்படி அடாவடியாகப் பேசுகிறீர்கள்" என்று அவர்களிடம் கேட்டேன்.

ஸ்கேனர் கண்காணிப்பில் இருந்த மற்றொரு வீரர் என் "சகோதரியிடம் சிரிஞ்சுகளை எடுத்துச் செல்கிறீர்களா" என்று உரக்க கேட்டார்.

மருத்துவ விவரங்களையெல்லாம் ஏன் அவர்கள் கேட்கிறார்கள். மக்களின் தனிப்பட்ட தகவல்களை இப்படி வெளியிடுவது சரியானது தானா?

இவை 'துன்புறுத்தல்' என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், "வந்ததில் இருந்து நீங்கள் கத்திக்கொண்டே இருக்கிறீர்கள்" என்று கூறியதோடு ஆங்கிலத்தில் உரையாடுமாறு கேட்டேன்.

அதற்கு பாதுகாப்பு வீரர்கள், "இந்தியாவில் விதிகள் மற்றும் வரைமுறைகள் உள்ளன" என்று எனக்கு பதில் கிடைத்தது. இந்த சம்பவங்களால் 20 நிமிடங்கள் கடந்துவிட்டன. மூத்த அதிகாரியிடம்  பேசுமாறு என்னிடம் பாதுகாப்பு வீரர்கள் கூறினர். நான் முக கவசத்தைக் கழற்றியதும் என்னை அடையாளம் கண்டுகொண்ட மூத்த அதிகாரி, "நான் உங்கள் ரசிகன். தயவுசெய்து நீங்கள் போகலாம்" என்றார்.
"என்னை அடையாளம் தெரிந்து நீங்கள் காட்டும் கரிசனம் எனக்குத் தேவையில்லை" என்று அவரிடம் கூறினேன்.

"என்னை அடையாளம் தெரிந்ததால் நீங்கள் மன்னிப்பு கூறினீர்கள். இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களின் நிலை என்ன? பெரியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" என்று அவரிடம் கூறினேன்.

விமான நிலையத்தைப் பாதுகாப்பது என்பது கடினமான காரியம். அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் அவர்கள் செயல்பட்ட விதம் சரியல்ல.
இந்த விவகாரத்தில் எனக்கு எதிராகவோ யாருக்கும் எதிராகவோ எவ்வித கொள்கைகளையும் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

Also Read | கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!

MADURAI, SIDDHARTH, SIDDHARTH INSTAGRAM POST, MADURAI AIRPORT, MADURAI AIRPORT INCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்