‘இது சினிமா சீன் இல்லை’.. ரியல் ‘ஹீரோ’வோட சேஸிங்.. ‘தனி ஒருவராக’ துரத்திய போலீஸ்.. பரபரக்க வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் பைக்கில் வந்து செல்போன்களை வழிப்பறி செய்த திருடர்களை போலீஸ் ஒருவர் துரத்தி பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் வழிப்பறி திருடர்கள் அதிகமாக வலம் வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் கையில் உள்ள பணத்தை, நகையை, செல்போனை பறித்துவிட்டு தப்புகின்றனர். கவனமுடன் இல்லாதவர்களை குறிவைத்தோ அல்லது கவனத்தை திசை திருப்பியோ தொடர்ந்து வழிப்பறி செய்து வருகிறார்கள்.

திருடிய சமயத்தில் உடனே அவர்கள் சிக்கினால்தான் வழிப்பறி செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. ஏனென்றால் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி விடுகின்றனர். இப்படி உள்ள சூழலில் செல்போன் வழிப்பறி கொள்ளையர்களை சப்-இன்ஸ்பெக்டர் அண்டிலின் ரமேஷ் என்பவர் துணிச்சலுடன் போராடி பிடித்துள்ளார. அந்த சிசிடிவி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், சப்-இன்ஸ்பெக்டர் அண்டிலின் ரமேஷை வெகுவாக பாராட்டி உள்ளார்.

அதில், ‘இது ஏதோ சினிமா படத்தில் வரும் காட்சி அல்ல. ஆனால் நிஜ வாழ்க்கை ஹீரோ எஸ்ஐ அண்டிலின் ரமேஷ் தனி ஒருவராக போராடி திருடர்களை பிடித்தது. திருடப்பட்ட பைக்கில் சென்ற செல்போன் வழிப்பறி கொள்ளையர்களை பின்தொடர்ந்து ரமேஷ் அவர்களை பிடித்துள்ளார். இதனால் மூன்று குற்றவாளிகளை கைது செய்ய வழிவகுத்துள்ளது. மேலும் திருடப்பட்ட 11 செல்போன்களை மீட்க வழிவகை செய்துள்ளது’ என சப்-இன்ஸ்பெக்டர் அண்டிலின் ரமேஷை பாராட்டி உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்