'எங்களுக்கு குழந்தை பொறந்துச்சுன்னா ராமேஸ்வரம் கோயில் வருவோம் சாமி...' 'கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு ரயிலில் கிளம்பியபோது...' பால் குடித்த 5 மாத குழந்தைக்கு நடந்த பரிதாபம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரயிலில் பயணம் செய்யும் போது பால் குடித்த 5 மாத குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அமித் ஷா (36) மற்றும்  மனைவி பிரியங்கா (30) மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் லால்பேட் கிராமத்தில் வசித்து வருகின்றனர். கார் ஓட்டுநராக வேலை செய்யும் பிரியங்காவிற்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் தனக்கு குழந்தை பிறந்தால் ராமேஸ்வரம் கோவிலுக்கு வருவதாக வேண்டியுள்ளனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் அமித்ஷா மற்றும் பிரியங்காவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது 5 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் ராமேசுவரம் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். நேற்று முன்தினம் ராமேசுவரம்- பைசாபாத் விரைவு ரயிலில் ஜபல்பூருக்கு ஊருக்குப் புறப்பட்டுள்ளனர். ரயிலில் வரும்போது, அழுத குழந்தைக்கு பிரியங்கா உறக்கத்திலேயே தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அந்நேரம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காத பிரியங்கா மற்றும் அமித்ஷா எப்பொழுதும் போல பயணம் செய்துள்ளனர்.

அதை அடுத்து நேற்று காலை அந்த ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, குழந்தை அசைவற்றுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளனர் பிரியங்கா மற்றும் உறவினர்கள். உடனே  குழந்தையை தூக்கிச் சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறி குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். கதறி அழுத பெற்றோரை பார்த்த அங்கிருந்த பொது மக்களும் ஆழ்ந்த சோகத்தில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். மேலும் 5 மாத குழந்தை கும்பகோணம் பெருமாண்டி சுடுகாட்டில் காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீஸார் ஆகியோர் முன்னிலையில் உடலை அடக்கம் செய்தனர்.

தனது கோரிக்கையை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றி சொல்ல வந்த குடும்பத்தினர் தனது குழந்தையை இழந்து ஊருக்கு திரும்பிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்