'2 பெண்கள் உட்பட 4 அதிகாரிகள்’.. 'இப்படியா பண்ணுவீங்க'.. பதற வைத்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டினைக் கண்காணிப்பதற்காகச் சென்ற மாநகராட்சி அதிகாரிகளைக் கடைக்குள் வைத்து கடை ஊழியர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதுமான பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து, தற்போது பெரும்பாலும் கடைகளில் பிளாஸ்டிக் பைகளை காண முடியவில்லை. ஆனாலும் அடுத்த சில நாட்களிலேயே பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின் பேரில், பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தடுப்பதற்கான நோக்கில், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அம்மாநகராட்சியின் நகர் நல அலுவலர் நமச்சிவாயத்தின் தலைமையில் 10 பேர் கொண்ட குழு, மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள சங்கர் என்பவரின் பட்டாசுக் கடையை சோதனையை செய்தபோது, 4 துப்புரவாளர்கள் 2 பெண் மேற்பார்வையாளர்கள் உட்பட 6 பேரையும் கடைக்குள் இழுத்து, ஷட்டரை சாத்திவிட்டு, கரண்ட் கனெக்ஷனை கட் செய்துவிட்டு கடைக்காரர்கள் ஓடிவிட்டனர்.
உள்ளிருந்து 6 ஊழியர்களும் ஷட்டரை தட்டி சத்தமெழுப்பினர். அப்போதுதான் அதிகாரி நமச்சிவாயமும் இன்னும் சில ஊழியர்களும் ஓடிச்சென்று சோதனை அதிகாரிகளை மீட்டனர். மேலும் கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதியப்பட்டதோடு, கடையில் இருந்த 50 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்