கணவர் வீட்ல இல்லாத நேரம் பார்த்து வர சொல்லுவேன்.. 2-வது கள்ளக்காதலனுடன் பேசிட்டு இருந்தப்போ வந்த முதல் கள்ளக்காதலன்.. நடந்தது என்ன? அதிர வைத்த வாக்குமூலம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பகுதியில் இருக்கும் பள்ளியில் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த 25ஆம் தேதி மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன்(வயது 50) என்பவர் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் சேத்தியாத்தோப்பு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதிர வைக்கும் உண்மைகள்:

மேலும், உடலில் காயங்கள் இருந்ததால், அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகித்த நிலையில் பிரேத பரிசோதனையில், கட்டையால் அடித்து வேல்முருகன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கரிவெட்டி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மனைவி மகாலட்சுமி(40), அதே கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(34) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.

தனிமையில் சந்தித்து பழக்கம்:

விசாரணையில் மகாலட்சுமி கூறியதாவது, 'நான் விவசாய கூலிதொழில் செய்து வருகிறேன். எனக்கு வேலைக்கு செல்லும் வழியில் தான் மேல்வளையமாதேவியை சேர்ந்த வேல்முருகனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல செல்ல நாங்கள் நெருங்கி பழக ஆரம்பித்தோம். தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்தோம். என்னுடைய கணவர் குழந்தைகள் வீட்டில் இல்லாத போது வேல்முருகனை தொடர்பு கொண்டு, அவரை வரவழைப்பேன். அதன்பின் எனக்கு கரிவெட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது வேல்முருகனுக்கு பிடிக்கவில்லை.

விரட்டி வந்து மண்டையை கொத்தும் காகம்.. தலையில் துண்டுடன் வெளியே செல்லும் பொதுமக்கள்.. அதுக்கு அப்படி என்ன கோவம்?

திட்டியதால் வந்த கோவம்:

அப்போது தான் கடந்த 24-ந் தேதி இரவு 10 மணி அளவில் வேல்முருகன், குடித்து விட்டு என் வீட்டிற்கு வந்தார். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் நான் ராமச்சந்திரனுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன். இதனை பார்த்த வேல்முருகன் ராமச்சந்திரனுடன் ஏன் பேசுகிறாய் என என்னை திட்டினார். அதோடு என்னை தனிமையில் வருமாறு அழைத்தார். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை.

சரமாரியான தாக்குதல்:

ஆனால் அவர் என்னை விடவே இல்லை அதனால் எனக்கு கோபம் வந்தது. ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த கட்டையால் வேல்முருகனை சரமாரியாக தாக்கினேன். தலையில் அடிபட்டதும் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். எனக்கு அந்த நேரம் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதன்பின் கள்ளக்காதலன் ராமச்சந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தேன். இருவரும் தீவிர ஆலோசனைக்கு பிறகு வெளியில் சென்றிருந்த கணவர் வருவதற்குள் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என நினைத்தோம்.

அதன்பின் நாங்கள் இருவரும் சேர்ந்து இரவு 11 மணி அளவில் வேல்முருகனின் உடலை தூக்கிக்கொண்டு, அங்குள்ள பள்ளி வளாகத்தில் போட்டுவிட்டோம்' எனக் கூறியுள்ளனர்.

மும்பை சேரியில் இருந்து மைக்ரோசாப்ட் சென்ற சிங்கப்பெண்.. ஒரு வாய் சாப்பாடு கிடைக்காது.. தெரு ஓரத்தில் தூக்கம்.. வைரலாகும் தன்னம்பிக்கை கதை

SHOCKING TWIST ON THE INCIDENT AT SETHIYATHOPE, சேத்தியாத்தோப்பு

மற்ற செய்திகள்