"முருகன், சிவன்-பார்வதியின் மகன் என்பதே கட்டுக்கதை..." "சிவனுக்கும், பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை..." 'ட்விஸ்ட்க்கு' மேல் ட்விஸ்ட் கொடுக்கும் 'சீமான்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்முருகன், சிவன்-பார்வதியின் மகன் என திரைக்கதை எழுதி அனைவரையும் நம்ப வைத்துள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சென்னையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீமான், நடிகர் ரஜினி குறித்து பேசினார். சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர்கள் படையெடுத்து வந்து எங்கள் மூதாதையர்களை வென்று, ஆட்சி செலுத்தியது போல், நீங்கள் மக்களாட்சி காலத்தில் படமெடுத்து வந்து எங்களை ஆள நினைப்பது சரியல்ல எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், முருகன், சிவன்-பார்வதியின் மகன் என்பதே கட்டுக்கதை என்றும், சிவனுக்கும், பார்வதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார்.
முருகன் காலம் வேறு, சிவன் காலம் வேறு. சிவன்-பார்வதியை முருகனுக்கு தாய்-தந்தை என கூறி நம்ப வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், சிவனுக்கு முருகனை மகனாக்கி சினிமா கதையை விட மிகப் பெரிய திரைக்கதை அமைத்துவிட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
இதேபோல், கண்ணன் குறித்து அவர் பேசுகையில், "கண்ணன் நீல நிறமா, கருப்பு நிறமா என இப்போது வரை பலருக்கு குழப்பம் உள்ளது. காரை திருடிச் சென்று நிறத்தை மாற்றுவது போல், கருப்பான கண்ணனை திருடிச் சென்று, நீல நிற வண்ணம் அடித்து விட்டனர். நீல நிறம் என்பது வடக்கில் இருந்து திணிக்கப்பட்டது" என்ற புதிய தகவலை குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘தம்பி.. அன்பு’!.. கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்.. சோகத்தில் உறைந்த தொண்டர்கள்..!
- “மண்சோறு சாப்பிடும் ரஜினி ரசிகர்களுக்கு இத கொடுக்கலாமே?” - சீமானின் அடுத்த சர்ச்சை பேச்சு!
- 'போர் உக்ரமா நடக்குது'...'நான் கறி வேண்டாம்னு சொன்னேன்'... 'பிரபாகரன் குறித்து சீமானின் வைரல் பேச்சு'!
- 'நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு'... 'முதல்வர் அதிரடி பதில்'... ‘சீமான் கடும் விமர்சனம்’!
- ‘இதுக்கெல்லாம் அஞ்சக்கூடாது’... ‘பிகில்’ ஸ்பெஷல் ஷோ சர்ச்சை... சீமான் பதில்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..
- "Jagan Mohan Reddy Implements My Plans In Andhra Pradesh ... அவரு என் புத்தகத்தை படிச்சிருக்காருன்னு நெனைக்கிறேன்," Says Seeman!