‘பக்கத்து வீட்டில் வந்த அலறல் சத்தம்’... ‘ஓடிச் சென்று பார்த்த’... ‘பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் இளைஞர் ஒருவர், பக்கத்து வீட்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருவபர் கந்தசாமி (34). அங்குள்ள பனியன் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவரும் இவர், காலையில் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வீட்டில் வேறு யாரும் இல்லாத நிலையில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு 4 வயது சிறுமியை, தனியே அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் தேடியபோது, கந்தசாமியின் வீட்டிலிருந்து, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சிறுமியை பாலியல்ரீதியாக, கந்தசாமி துன்புறுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், கந்தசாமியை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாகத் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடமிருந்து கந்தசாமியை மீட்டு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- ‘காரணமே இல்லாம தினமும் அடிப்பாங்க’.. ‘9 வது மாடியில் இருந்து குதித்த சிறுவன்’ நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘ப்ளஸ் 1, 2 மாணவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்’... ‘பொறியியலா? மருத்துவமா?’... ‘பாடத்திட்டமுறையில் அதிரடி மாற்றம்’
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'பேச முடியாததால தவித்த நண்பன்'.. 'சைலண்ட்டா கேபிளை கட் பண்ணிய ஊழியர்கள்'.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- காலாண்டு விடுமுறை இல்லையா..? உண்மை என்ன..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!