‘பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்‘... 'ப்ளஸ் டூ படித்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே அரசுப் பள்ளி ஆய்வுக்கூடத்தில் 12-ம் வகுப்பு மாணவி, உதவி தலைமை ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காக்காபாளையம் பகுதியில் வேம்படித்தாளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு உதவித் தலைமை ஆசிரியராகவும், வேதியியல் ஆசிரியராகவும் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். அதேப் பள்ளியில் கடந்த ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்–2 படித்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வுக்கூடத்தில் வைத்து, ஆசிரியர் பாலாஜி தன்னை பாலியல் தொல்லை அளித்ததாகவும், தொடர்ந்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அரசுப் பள்ளி ஆய்வகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக, உயர் காவல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர் காவல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி தலைமறைவானது தெரியவந்தது.
மாணவியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், ஆசிரியர் பாலாஜி மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட 3 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வந்தனர். தற்போது பள்ளியின் உதவி ஆசிரியர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதற்கிடையில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் பாலாஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமேல் இப்படி பண்ணுவியா'... 'கேமராவில் சிக்கிய ஆசிரியர்'...பதற வைக்கும் சம்பவம்!
- ‘மீண்டும் ஒரு பொள்ளாச்சி’.. ‘சக மாணவர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்’.. இணையத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பு!
- 'எல்லோரும் கண்ண மூடிங்கோங்க' .. மாணவன் கழுத்தில் கோடரியை வைத்த ஆசிரியர்! நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ!
- ‘யாராவது குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்களேன்’. நிர்வாணமாக கெஞ்சிய முதியவர்! நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!
- 'இப்படி முடியும்னு நெனைக்கல'.. 'மன்னிச்சிருங்க'.. ஹாஸ்டல் அறையில் ஐஐடி மாணவர் தற்கொலை.. கலங்க வைக்கும் காரணம்!
- 'சென்னை' சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'கைதானவரின் மனைவி' செய்த அதிர வைக்கும் செயல்' !
- 'அதிர்ச்சியில் உறைந்த சென்னை'... '4 வயது 'சிறுமி'க்கு நேர்ந்த கொடூரம்'... 'கழிவறை வாளி'க்குள் சடலம்!
- ‘அவளை நீ காதலிக்கக் கூடாது..’ கல்லூரிமுன் நடந்த பதைபதைக்க வைக்கும் பயங்கரம்..
- ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல மறுத்த இஸ்லாமியரை ரயிலில் இருந்து தூக்கி வீசிய கும்பல்..! மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!
- ‘டீச்சர் சாதியை சொல்லி திட்றாங்கம்மா’.. ‘டாய்லெட் கழுவ சொல்லுவாங்க’.. கலெக்டர்முன் கண்ணீருடன் நின்ற பெற்றோர்!