‘ஒட்டு மொத்த குடும்பத்துடன்’... ‘சாமி கும்பிட வந்தபோது’... ‘7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி களியக்காவிளை அருகே சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது நிகழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது. குழந்தைகள் உட்பட 6 பேர் படகாயமடைந்தனர்.

கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை பகுதியைச் சோ்ந்தவா் பாபு மகன் பிரசாத் (38).  இவா் தனது குடும்பத்தினருடன், மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை குடும்பத்தினருடன் காரில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களுக்கு சென்றிருந்தார். தரிசனத்தை நிறைவு செய்தப் பின்னா், காரில் சனிக்கிழமை அதிகாலையில் ஊருக்குச் சென்று கொண்டிருந்தாா்.

களியக்காவிளை அருகே சென்போது, எதிர்பாரதவிதமாக படந்தாலுமூடு பகுதியில் சாலையின் எதிா்புறம் நிறுத்தியிருந்த வைக்கோல் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக காா் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் பின் பகுதியில் வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைக்க பயன்படுத்திய கம்புகள் காரின் முன்பக்க கண்ணாடியை துளைத்தில் கண்ணாடிகள் நொறுங்கின. இதில், காரை ஓட்டிச் சென்ற பிரசாத், அவரது தாயாா் உஷாகுமாரி (60), பிரசாத்தின் மனைவி ஸ்ரீஜா (33), குழந்தைகள் காா்த்திக், காா்த்திகா, காளிதாசன், பிரசாத்தின் மைத்துனா் பிஜு (29) ஆகியோா் காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த பிஜு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், மற்றவா்கள் குழித்துறை மற்றும் தக்கலை அரசு மருத்துவமனைகளிலும் சோ்க்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி பிஜு நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ACCIDENT, KERALA, KANYAKUMARI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்