நான் இங்கே விருந்துக்கு வரலை' - ஆவேசப்பட்ட ஜோதிமணி.. செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கரூர்: திமுக -காங்கிரஸ் கட்சியினரிடையே வார்டு பங்கீடு விவகாரத்தில் எம்பி ஜோதிமணி ஆவேசப்பட்டது தொடர்பாக செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

Advertising
>
Advertising


நகராட்சியாக இருந்தவந்த கரூர், முதன்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாநகராட்சி மேயர், மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, திமுக, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள், கரூர் மாநகராட்சியைக் கைப்பற்ற வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்நிலையில், கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பான இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஜோதிமணி இதுபற்றி கேட்டதாகவும், அதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கோபத்துடன் வெளியே வந்த ஜோதிமணி, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன்னை வெளியேற சொல்வது தான் திமுகவின் கூட்டணி தர்மமா?  இது தான் திமுகவில் பெண்களுக்கு தரும் மரியாதையா? விருந்துக்கு வந்திருக்கேனா? எனக்கும் திருப்பிப் பேசத் தெரியும்' என ஆவேசமாகப் பேசியபடி வெளியேறினார். ஜோதிமணி ஆவேசத்துடன் வெளியேறும்போது செய்தியாளர்கள் படம் பிடித்தனர். அதனை திமுகவினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கரூர் எம்பி ஜோதிமணி கோபத்துடன் பேசிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக - காங்கிரஸ் இடையே இடப்பகிர்வில் என்ன பிரச்னை என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.

இதில், "கரூரை பொறுத்தவரையில் திமுக சார்பிலும், கூட்டணி கட்சிகளும் எந்தெந்த வார்டுகளில் போட்டியிட உள்ளனர். வார்டு உறுப்பினர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதேபோன்று திமுக சார்பில் யார் போட்டியிட உள்ளனர் என்ற அறிவிப்பை கட்சி தலைமை வெளியிடும் என்று தெரிவித்தார். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் கடந்த 2 நாட்களாக வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் தரப்பில் பட்டியல் தந்தார்கள். நாங்களும் திமுக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து ஒரு பட்டியலை தோழமை கட்சிகளிடம் கொடுத்தோம்.

திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் காங்கிரஸ் மாவட்ட செயலாளரிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் முடித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது நான்கு வார்டு மாநகராட்சியில் கேட்பது தவறில்லை. காங்கிரஸ் தரப்பில் நான்குமே பொதுவான வார்டுகளை கேட்குறாங்க. மகளிருக்கு 15% போட்டி, 50% பொது வார்டை கொடுத்துவிட்டால் திமுகவில் பேரூராட்சி, பிற வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இதனால் நீங்கள் சொல்வதை ஏற்கிறோம். அதேபோன்று நாங்கள் உறுதி செய்யப்பட்ட இடத்தில் நீங்கள் போட்டியிடலாம் என்று முறையிட்டோம் இதுதான் கருத்து முரணாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.

JOTHIMANI, KARUR MP JOTHIMANI, DMK, CONGRESS, LOCAL BODY ELECTION, JOTHIMANI ANGRY, MINISTER SENTHILBALAJI, PRESS MEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்