'வீட்டுல பெண் குழந்தை இருக்காங்களா'?... 'அம்மா, பாட்டியோட ஒரு செல்ஃபி'... காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதேபோன்று சிறுவயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்துதல், பெண் சிசு கொலை ஆகியவை அதிகம் நடைபெறுகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் சமூக நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்து அனுப்பினர். இதில் 15 சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 24-ந்தேதி பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்த தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி பெண் குழந்தை அவரது தாய், பாட்டி ஆகிய 3 தலைமுறைகளுடன் செல்ஃபி எடுத்து போட்டோ அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

பெண் குழந்தை உள்ளவர்கள். 'Beti Bachao Beti Padhao' என்ற பேஸ்புக் முகவரி அல்லது 7397285643 என்ற வாட்ஸ்-அப் எண் பாட்டி, அம்மா, குழந்தை ஆகியோர் செல்பி எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் அதில் பெண் குழந்தையின் முழு பெயர், பெற்றோர் பெயர், முகவரி பதிவு செய்ய வேண்டும் இதனை வருகிற 13-ந் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இதில் சிறந்த செல்ஃபி படம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மாவட்டத்தில் இருக்கும் பல பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற திட்டங்கள் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பெண் சிசு கொலைகளை தடுப்பதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன்கள் பலரும் மாவட்ட ஆட்சி தலைவரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

TIRUVANNAMALAI, COLLECTOR, SELFIE, DAUGHTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்