சீமான் 'இந்த' தொகுதியில் போட்டியா?.. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி... தேர்தல் வியூகம் என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தேர்தலில் போட்டியிடும் தொகுதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2021 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்ய தொடங்கிவிட்டனர்.

நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துவிட்டு, தேர்தல் பணிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக தீவிரமாக செய்து வருகின்றனர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்தமுறை வட மாவட்டத்தில் போட்டியிட்ட சீமான், இந்த முறை தென்மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

தன்னுடைய சொந்த மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடலாமா அல்லது பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாமா என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்