2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் அரசியல் கூட்டணி?.. சீமான் சொன்ன 'நச்' பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Advertising
>
Advertising

Also Read | மதுரையில் நடிகர் சூரியுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவை கண்டுகளித்த அமைச்சர் உதயநிதி.!!

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

Beast படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகி உள்ளது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான்

செந்தமிழன் சீமான் ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.  தொடர்ந்து மாதவன் நடிப்பில் ‘தம்பி’, 'வாழ்த்துகள்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகராக ‘பள்ளிக்கூடம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகிழ்ச்சி’, 'எவனோ ஒருவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் ‘நாம் தமிழர் கட்சி’ என்கிற தேர்தல் அரசியல் இயக்கத்தை தொடங்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இயங்கி வரும் சீமான், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விஜய்யுடன் அரசியல் கூட்டணி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக "விஜய் அரசியலுக்கு வந்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் சீமான் - விஜய் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கா?" என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், "இதை நீங்கள் என் தம்பி விஜய்ட்ட தான் கேட்கனும். அதை அன்னைக்கு தான் யோசிக்கனும். தம்பி சூர்யா, கார்த்தி, சிலம்பரசனுக்கு பிரச்சினைகள் வரும் போதும் பேசியிருக்கேன்.  நாம் தமிழர் தனித்து போட்டியிட தயாராக உள்ளது. முதலில் விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட தயாராக இருக்க வேண்டும். என்னுடைய கொள்கையோடு ஒத்துப் போக வேண்டும்." என சீமான் பதில் அளித்துள்ளார்.

Also Read | “விஜய் தான் சூப்பர் ஸ்டார்” - சீமான்.. “சூப்பர் பெருசா? சுப்ரீம் பெருசா?” - கேள்வியால் டென்சன் ஆன சரத்குமார்

SEEMAN, VIJAY, NTK SEEMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்