'சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 விவகாரம்'... 'கடுமையாக எழுந்த விமர்சனம்'... திடீரென நடந்த அதிரடி திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீமான் வேட்புமனுவில் ஆண்டு வருமானம் ரூ.1,000 எனத் தாக்கல் செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இதையடுத்து சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது ஆண்டு வருமானம் ரூ.1,000 எனக் குறிப்பிட்டிருந்தார். இது எப்படி சாத்தியம் எனக் கடுமையான விமர்சனம் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கடுமையாக விமர்சித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், இந்நிலையில், அக்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், ''சீமான் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது ஆண்டு வருமானம் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அவர் வருமான வரித்துறைக்குச் செலுத்திய தொகைதான் ரூ.1,000. அவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். எனவே, மேற்கண்ட தவற்றைத் திருத்தி புதிய பிரமாணப் பத்திரம் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்படும்" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தேர்தல் வரலாற்றிலேயே இப்படி ஒரு வாக்குறுதியை கேள்விப்பட்டிருப்போமா'?... 'அசர வைத்த அதிமுக வேட்பாளர்'... வாயடைத்து போன மக்கள்!
- 'என் மக்களே, நான் ஏன் 234 தொகுதியிலும் தனியா போட்டியிடுறேன் தெரியுமா?'... உண்மையை உடைத்த சீமான்!
- புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக அரசு... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
- 'இந்த' ஒரு விஷயம்... 'இந்தியாவிலேயே தமிழகம் தான் பெஸ்ட்!'.. அதிமுக அரசின் சாதனைகளை அடுக்கிய முதல்வர் பழனிசாமி!
- ‘அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி அதிரடி..!
- ‘என் பேரை பாஜக வேட்பாளாரா அறிவிச்சது எனக்கே தெரியாது’!.. போட்டியிட முடியாது என நிராகரித்த MBA பட்டதாரி.. கேரளாவில் பரபரப்பு..!
- ‘அப்பாவை விட அதிகம்’!.. உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வேட்புமனுவில் வெளியான தகவல்..!
- 'இது தான் எங்களோட மாஸ்டர் ஸ்ட்ரோக்'... 'எங்களோட வெற்றி எப்படி இருக்கும்ன்னு மட்டும் பாருங்க'... டாக்டர் ராமதாஸ்!
- ‘எந்த ஆரவாரமும் இல்லை’!.. தனியாக நடந்து வந்து எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர்..!
- 'அனைவருக்கும் ’விலையில்லா’ வாஷிங்மெஷின்... வீட்டில் ஒருவருக்கு ’அரசு’ வேலை’... ’இன்னும் வியக்க வைக்கும் பல திட்டங்கள்...' - மாஸ் காட்டிய அதிமுக-வின் தேர்தல் அறிக்கை...!