வாக்களிக்க வந்த 'சீமான்'.. மகிழ்ச்சியில் சூழ்ந்த பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சாலிகிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாக்களித்தனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று நடக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச் சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாக்களித்தார். அவருடன் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் வாக்களித்தார்.

அதற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், 'நாளை நமதே நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய அளவு, 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக செயல்படுகிறது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்' என்று தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.  அப்போது அவரை ஓட்டுப்போட வந்த மக்கள் மகிழ்ச்சியில் சூழ்ந்துக் கொண்டனர். இதனை வீடியோவில் காணலாம்.

SEEMAN, LOKSABHAELECTION2019, SALIGRAMAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்