'மருத்துவமனைக்குள்' நுழைந்த 5 'தீவிரவாதிகள்'... 'அதிரடியாக' நுழைந்து சுட்டுத் தள்ளிய 'போலீசார்'... கடைசியில் தான் தெரிந்தது எல்லாம் 'ரப்பர் குண்டு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ளும் வகையிலும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில், கமாண்டோ வீரர்கள், சென்னை காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தீவிரவாதி ஒருவரை கடந்தி செல்ல, மருத்துவமனைக்குள் 5 தீவிரவாதிகள் துப்பாகியுடன் நுழைந்து, போலீசாரை சுட்டுவிட்டு, சிகிச்சை பெற்று வரும் தீவரவாதியை கடத்தி செல்வதை போல் கமாண்டோ படையினர் ஒத்துகை செய்தனர்.

பின்னர் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கமாண்டோ துணை ஆணையர் சோலை ராஜன் தலைமையில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து தீவிரவாதிகளை சுட்டு கொன்று விட்டு, பிணை கைதிகளை மீட்டு மருத்துவமனையை கட்டுக்குள் கொண்டு வருவது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் காவல்துறையினர் பயன்படத்திய துப்பாக்கியில் ரப்பர் குண்டுகள் மட்டுமே பயன்படத்தப்பட்டன.

CHENNAI, RAJIVGANDHI HOSPITAL, REHEARSAL, GOVERNMENT, DOCTORS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்