தென்னந்தோப்புக்கு நடுவே இருந்த குடிசை வீடு.. திடுக்கிட வைத்த ரகசிய தகவல்.. அதிகாரிகள் அதிரடி ஆக்‌ஷன்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தென்னந்தோப்புக்கு நடுவே குடிசை வீட்டில் ரகசியமாக இயங்கி வந்த ஸ்கேன் மையத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி அருகே உள்ள தென்னந்தோப்புக்கு நடுவே ஒரு சிறிய குடிசை வீட்டில் ஸ்கேன் மையம் நடந்து வந்துள்ளது. அங்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து கொடுப்பதாக கூறப்படுகிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம். இந்த சூழலில் இதுகுறித்து சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பந்தப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றுள்ளனர். அப்போது பெண்கள் சிலரும் சுகுமார், வேடியப்பன் என்ற இருவரும் இருந்துள்ளனர். இதனை அடுத்து சுகுமார், வேடியப்பன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு ஸ்கேனுக்கு 8000 ரூபாய் வரை வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. திருப்பத்தூர் மட்டுமல்லாமல் சேலம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் இந்த ஸ்கேன் மையத்துக்கு பெண்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் மூலம் ரகசிய தகவல் தெரிவித்து இந்த ஸ்கேன் மையத்துக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. கைதான நபர்களிடமிருந்து இருந்து சுமார் 75 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்னந்தோப்புக்கு நடுவே ரகசியமாக ஸ்கேன் மையம் நடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCANCENTER, TIRUPATTUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்