"முதல் மனைவி தான் வேணும்னா நான் எதுக்கு".. கோபத்தில் இருந்த 2 ஆவது மனைவி..? இரவில் அரங்கேறிய கொடூரம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழைய வண்ணார்பேட்டையை அடுத்த காட்பாடா மெயின் தெருவை சேர்ந்தவர் ஷாஜஹான். இவருக்கு 47 வயதாகிறது.

"முதல் மனைவி தான் வேணும்னா நான் எதுக்கு".. கோபத்தில் இருந்த 2 ஆவது மனைவி..? இரவில் அரங்கேறிய கொடூரம்!!
Advertising
>
Advertising

இவர் தனது முதல் மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தோல் நிறுவனம் ஒன்றை ஷாஜஹான் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்போது, அங்கே டெய்லராக பணிபுரிந்து வந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு ஷாஜஹான் திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், ஹசீனாவை நைனியப்பன் கார்டன், ஆறாவது சந்து பகுதியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து தங்க வைத்துள்ளார் ஷாஜஹான். ஹசீனாவின் வீட்டிற்கு அவ்வப்போது சென்று தங்குவதையும் ஷாஜஹான் வழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹசீனாவின் வீட்டில் ஷாஜஹான் தங்கி இருந்த நிலையில், மறுநாள் காலையில் ஹசீனா பேகம் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் ஷாக் அடித்து இருந்ததாகவும் ஷாஜஹான் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, தனது மகளின் கையில் காயங்கள் இருந்ததால், மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஹசீனாவின் தாயார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹசீனாவின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, ஹசீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில், மூச்சடைக்கப்படும், உடலில் மின்சாரம் செலுத்தப்பட்டும் ஹசீனா கொலை செய்யப்பட்டது உறுதியானதாக தகவல்கள் கூறுகின்றது.

இதன் பெயரில், கணவர் ஷாஜஹானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆரம்பத்தில் உண்மையை மறைத்த அவர், பின்பு மனைவி ஹசீனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதற்கான காரணம் தொடர்பாக நடந்த விசாரணையிலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்லும் கணவர் ஷாஜஹான், தன்னுடன் நிறைய நாட்கள் தங்க வேண்டும் என ஹசீனா அவரை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதே போல, முதல் மனைவியுடனும் நிறைய நேரத்தை அவர் செலவிடுவதும் ஹசீனாவுக்கு பிடிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் நிகழ்ந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த ஷாஜஹான், தனது மனைவி ஹசீனா தூக்கத்தில் இருந்த போதே கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலமும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தான் மின்சாரம் செலுத்தி கொலை செய்ததை மறைத்து, மனைவி ஷாக் அடித்து இறந்தது போல காண்பிக்க அவரது உடலில் மிஷின் கொண்டு காயத்தை உருவாக்கியதையும் ஷாஜஹான் தெரிவித்துள்ளார்.

HUSBAND, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்