கொரோனாவில் இருந்து 'மீண்ட' 2-வது தமிழக மாவட்டம்... உச்சகட்ட 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அரசுகளின் கடினமான நடவடிக்கைகள் மூலம் பல்வேறு மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு வருகிறது.

இந்திய அளவில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்கள் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக மாவட்டமான ஈரோடு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளது.  கடந்த 12 நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட 70 பேர்களில் நான்கு பேர் மட்டும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஆரம்பத்தில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்த ஈரோடு மாவட்டம் தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியை குறிக்கும் சிவப்பு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலமாக மாறியுள்ளது. முன்னதாக, தமிழகத்தை பொறுத்தவரை நீலகிரி மாவட்டம் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்