சென்னை மெரினா கடற்கரையில் கடல் திடீரென உள்வாங்கியதால் மக்கள் பதற்றம் அடைந்தனர். முதலில் சுனாமி ஆக இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்தனர் சென்னை மக்கள். தற்போது கடல் நீர் மட்டம் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
சென்னையில் நள்ளிரவில் கடல் திடீரென உள்வாங்கியது. சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடல் நீர் கரையில் இருந்து திடீரென 10 முதல் 15 மீட்டர் வரையில் உள்வாங்கியது. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர்.
2 நாட்களுக்கு முன்னர் தான் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் தென் பகுதிகளில் ஏதேணும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். சமீபத்தில் பாண்டிச்சேரியில் கூட சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் அப்படி எந்த சுனாமி அபாயமும் இந்தியாவுக்கு இல்லை எனத் தெளிவுபடுத்தியது.
சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 1 மணி நேரத்துக்கு உள்வாங்கிக் காணப்பட்ட கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மக்களின் பயப்படத் தேவையில்லை என்றும் தற்போது சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும் இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கான மழை நிலவரத்தைப் பொறுத்த வரையில் வருகிற 17-ம் தேதி தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி வரையில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையை நனைத்த ‘திடீர்’ மழை.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை மையம் தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ புயல்.. ‘20 ரயில்கள் ரத்து’.. வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
- அப்பாடா நவம்பர் முடிஞ்சிருச்சின்னு நெனக்காதீங்க.. டிசம்பர்னு ஒரு மாசம் இருக்கு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- தமிழக மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
- இன்னைக்கு 'நைட்'ல இருந்து நாளைக்கு 'காலை'ல வரை ரொம்ப உஷாரா இருக்கணும்...! - தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்த 'முக்கிய' தகவல்...!
- இன்னைக்கு புதுசா ‘ஒண்ணு’ வருது...! பெருசா சம்பவம் பண்ணுமா...? - பலத்த மழை வார்னிங்...!
- அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை மையம் தகவல்..!
- ‘விடாமல் வெளுக்கும் கனமழை’.. வெள்ளக்காடான செங்கல்பட்டு நகரம்..!
- “கல்நெஞ்சக்காரர்...” கலெக்டரை ஜாலியாக கிண்டல் செய்த எஸ்பி..!
- ‘காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவில்லை’.. அப்படின்னா மழைக்கு வாய்ப்பு இருக்கா..? வானிலை ஆய்வு மைய இயக்குனர் ‘முக்கிய’ தகவல்..!