மண்டை பத்திரம்.. 8 KG எடைகொண்ட 'கருங்கல்' ஹெல்மெட்.. முரட்டு ஐடியாவே இருக்கே.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவிநாசியில் கருங்கல்லில் ஹெல்மெட்டை வடிவமைத்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சிற்பி ஒருவர்.
Also Read | மாமன்னர் ராஜராஜ சோழரின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்.. முதல்வர் முக. ஸ்டாலின் அறிவிப்பு..!
இந்தியாவில் போக்குவரத்தின் தேவை எப்போதுமே மிக அதிகம். மக்களின் தேவைகளுக்காக பொது போக்குவரத்து சேவைகளை அரசுகள் மேம்படுத்தி வருகின்றன. இதனிடையே பொதுமக்களிடையே தனியாக வாகனங்கள் வாங்கும் ஆர்வமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் சாலை விபத்துகளை தடுக்க ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
முக்கியமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பயணத்தின் போது ஹெல்மெட் அணியும்படி தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான விபத்துகளில் ஹெல்மெட் அணியாததால் உயிர்சேதம் ஏற்படுவதை கருத்தில்கொண்டு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாகியுள்ளது தமிழக அரசு. இதனிடையே மக்களிடம் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவிநாசியை சேர்ந்த ஒருவர் கருங்கல்லில் ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கால்நடை மருத்துவமனை எதிரில் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருபவர் சரவணன். 32 வயதான இவர் ஒரே கருங்கல்லில் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்திருக்கிறார். 8 கிலோ எடை கொண்ட இந்த கருங்கல் ஹெல்மெட்டை உருவாக்க 3 மாத காலம் தேவைப்பட்டதாக கூறுகிறார் சரவணன். கோவிட் காலத்தில் கொரோனா கிருமி, முகக்கவசம், சானிடைசர் பாட்டில் ஆகியவற்றையும் சிற்பமாக செதுக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் இவர்.
இந்நிலையில், மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கருங்கல் ஹெல்மெட்டை செதுக்கியதாக கூறுகிறார் சரவணன். இதுபற்றி அவர் பேசுகையில்,"இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று அதற்க்கு அபராதமும் செலுத்துகின்றனர். அதுமட்டும் அல்லாமல் விபத்து ஏற்பட்டால் விலைமதிப்பில்லாத உயிரையும் இழக்க நேரிடுகிறது. ஆகவே, மக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த கருங்கல் ஹெல்மெட்டை வடிவமைத்தேன்" என்றார்.
Also Read | இது புதுசா இருக்குண்ணே.. கல்யாண மண்டபம் கொடுத்த விநோத ஆஃபர்.. ஆச்சர்யப்பட்டுப்போன மக்கள்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அது மட்டும் இல்லன்னா என்ன ஆகி இருக்கும்??.." பேருந்தில் இப்படி சிக்கிய நபர்.. பதைபதைப்பு சம்பவம்
- இனி ஹெல்மெட்டை இப்படி போட்டெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது.. வெளியானது புது ரூல்ஸ்..!
- என்ன தினேஷ் கார்த்திக் ‘ஹெல்மெட்’ மட்டும் வித்தியாசமா இருக்கு.. அப்படி என்ன ஸ்பெஷல்..?
- VIDEO: ஒரு 'சேஃப்டிக்கு' எடுத்து வச்சுப்போம்...! 'காட்டுக்குள்ள யூஸ் ஆகும்...' 'பைக் முன்னாடி போய் யானை பார்த்த வேலை...' - ஒரு முடிவோட தான் வந்துருக்கு போலையே...!
- 'உங்க மேல ஒரு கம்ப்ளெயின்ட் இருக்கு...' 'ஒழுங்கா ஃபைன் கட்டுங்க...' 'கம்ப்ளெயின்ட் பார்த்து ஆடிப்போன மனுஷன்...' - ஒரு 'லாரி டிரைவருக்கு' இப்படியெல்லாமா சோதனை வரும்...!
- எனக்கு வேற வழி தெரியலங்க...! 'தலையில ஹெல்மெட் போடல...' 'போலீசார் அபராதம் கேட்ட உடனே...' - பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம்...!
- 'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...!
- வீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’!
- ‘கல்யாணமாகி 6 மாசம் ஆச்சு’.. ‘இப்போ வந்து இப்டி சொல்றீங்க’.. கணவன் சொன்ன பதிலால் ‘ஷாக்’ ஆன மனைவி..!
- ‘ஹெல்மெட்டுக்குள்’ இருந்த ‘ஆபத்து’ தெரியாமல்... ‘11 கிமீ’ பயணம்... வண்டியை நிறுத்தியபின் ‘அதிர்ந்துபோய்’ மயங்கிய ‘பரிதாபம்’...