‘கொரோனாவுக்கு மருந்து’... ‘புதிய முயற்சிக்கு, நாட்டிலேயே முதலாவதாக'... ‘ஐ.சி.எம்.ஆரிடம் அனுமதி பெற்ற மாநிலம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்து, அதற்கான அனுமதியையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் முதல் மாநிலமாக பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்காத நிலையில், கொரோனா பாதிப்புக்கு மருந்து கண்டறிய பிளாஸ்மா தெரபியைப் பயன்படுத்தக் கேரளா முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா மாதிரிகளை எடுத்து, அதிலிருந்து கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகளைப் பிரித்தெடுத்து சிகிச்சைக்குப் பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
கொரோனாவிலிருந்து குணமான ஒருவரின் உடலில், கொரோனா எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும். அவற்றை அடையாளம் கண்டுப்பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுத்து சிகிச்சையளிப்பதே கேரளாவின் திட்டம். இந்த முறையைப் பயன்படுத்தி அமெரிக்கா, சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வரும் சூழலில், இந்தியாவில் இந்த முறையைச் சோதனை செய்யக் கேரளா முடிவெடுத்துள்ளது.
கேரள அரசின் இந்தத் திட்டத்திற்கு ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா, சார்ஸ், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உதவியதாக மருத்துவர்கள் கூறி வந்தனர். கேரளாவுக்கு முதன்முறையாக அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அனுமதிபெற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முறைக்கான சோதனை வெற்றிகரமாக அமைந்தால், சிகிச்சைக்கான செலவு குறையும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா வைரஸ் கோர தாண்டவம்’... ‘ஒரே சிறையில் அளவுக்கு அதிகமான பாதிப்பால்’... 'செய்வதறியாது திகைத்துள்ள அதிகாரிகள்'!
- 'உச்சகட்டத்தை' அடைந்துள்ள 'கொரோனா' தாக்குதல்... 'இனி' படிப்படியாக... 'காலியான' நாடாளுமன்றத்தில் பேசிய 'பிரதமர்'...
- “லாக்டவுன் நேரத்துல எங்க வந்தீங்க?”.. வாகன ஓட்டியை நிற்கச்சொன்ன டிராபிக் காவலருக்கு நேர்ந்த கதி!
- பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல தயாரான தாய்மார்கள்!... கடைசி நிமிடத்தில் வந்த பரிசோதனை முடிவு!... நெஞ்சை உலுக்கும் துயரம்!
- 'குண்டா' இருக்குறவங்கள 'கொரோனாவுக்கு'ரொம்ப 'பிடிக்குமாம்...' 'உடற்பருமன்' கொண்டவர்கள் 'ஜாக்கிரதை'...! 'புதிய ஆய்வில் தகவல்...'
- 'ஊரடங்கு' முடிந்ததும்... ஏப்ரல் 15-லிருந்து 'ரயில்' சேவை 'தொடங்கப்படுகிறதா?'... ரயில்வே துறை வெளியிட்டுள்ள 'அறிக்கை'...
- '3-ம் நிலைக்கு போகலாம்'...'அதுக்கு வாய்ப்பிருக்கு'... 'எச்சரித்த முதல்வர்'...ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
- கொரோனா தடுப்பு பணியில்... செவிலியர்கள் 'சேலை' அணிய தடை!... என்ன காரணம்?
- 'ஃபிரிட்ஜிக்குள்' புகுந்த '6அடி நீள பாம்பு'... 'அலறியடித்து' ஓட்டம் பிடித்த 'குடும்பத்தினர்...' வனத்துறையினரின் 'சாதுர்யமான செயல்'...
- 'பணத்தை' சிக்கனமாக 'செலவு' செய்யுங்கள்... 'இனிவரும்' காலங்கள் 'சவாலாக' இருக்கும்... தொழில்கள் 'புத்துயிர்' பெற 'ஆண்டுகள்' கூட ஆகலாம்... 'பொருளாதார' நிபுணர்கள் 'எச்சரிக்கை...'