‘நடுரோட்டில் தீடிரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன டிரைவர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எஸ்யூவி கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘நடுரோட்டில் தீடிரென தீப்பிடித்து’... ‘எரிந்த சொகுசு கார்’... 'பதறிப்போன டிரைவர்'!

சேலம் அருகே, வெங்கடேஷ் என்பவர், தனது ஓட்டுநர் ராஜாவுடன், ஸ்கார்ப்பியோ காரில் சென்று கொண்டிருந்தார். சேலம் டால்மியா காலனியிலிருந்து, ஐந்து ரோடு நோக்கி கார் போய்கொண்டிருந்தது. அரபிக் கல்லூரி அருகே, ஸ்கார்ப்பியோ போனபோது, கார் எஞ்சின் பகுதியில் திடீரென தீ பற்றி, மளமளவென எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து பயந்துபோன, கார் ஓனரான வெங்கடேஷ் மற்றும் கார் ஓட்டுநர், இருவரும் காரைவிட்டு உடனடியாக கீழே இறங்கினர். பின்னர்,  தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். எனினும் அவர்கள் வந்து சேர்வதற்குள், தீயானது கார் முழுவதும் பரவி மளமளவென எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ACCIDENT, FIRE, SALEM, SCORPIO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்