‘9 மணிக்கு விளக்கு வச்சோம்’.. ‘அப்போ நிலாவை சுத்தி பெரிய வட்டம் தெரிஞ்சது’.. கோவையில் நடந்த அதிசயம்..! என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் நிலாவை சுற்றி பெரிய வட்டம் தெரிந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி நேற்றிரவு 9 மணிக்கு வீடுகளின் மின்விளக்குகளை அணைத்து விளக்கு ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று மக்கள் வீட்டின் வெளியே விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றினர். அதேபோல் கோவை மக்களும் 9 மணிக்கு வீட்டைவிட்டு வெளியே வந்து விளக்கு ஏற்றியுள்ளனர். அப்போது வானில் நிலாவை சுற்றி பெரிய வட்டம் தெரிந்துள்ளது. அதைப் பார்த்த மக்கள் என்னமோ நடக்கிறது என வியந்து பார்த்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த பேராசிரியர் மணிகண்டன், ‘இங்கிருந்து பார்ப்பதற்கு நிலாவை சுற்றி வட்டம் இருப்பதுபோல் தெரியும். ஆனால் நிலாவை சுற்றி எந்த வட்டமும் இல்லை. பூமிக்கு மேல் குறிப்பிட்ட தூரத்துக்குதான் காற்று இருக்கும். அதன்பிறகு காற்று இருக்காது. பூமியில் உள்ள நீர் நீராவியாக மாறி மேலே சென்றுவிடும். இதுதான் வட்டம் போல் தெரிகிறது. நிலாவின் வெளிச்சம் அதன் வழியே புகுந்து வரும்போது இப்படி தெரியும்.
அது சின்ன வட்டமாக இருந்தால் மிக தொலைவில் இருக்கிறது என்று அர்த்தம்.பெரிய வட்டமாக இருந்தால் அருகில் இருக்கிறது என்று அர்த்தம், இப்படி தோன்றினால் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என அறிகுறி. இதைத்தான் நம் முன்னோர்கள் “தூரவட்டம், சேரமழை” என்று சொல்வார்கள். அப்படி தோன்றும்போது மழை பெய்ய வாய்ப்பு அதிகம்’ என தெரிவித்துள்ளார்.
News Credits: Vikatan
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கடையில யாரும் இல்ல'... 'அந்த மனசு தான் சார் கடவுள்'... சலுயூட் போட வைத்த 'கோவை' மக்கள்!
- #coronalockdown: ‘பணியாளர்களே இல்லை!’.. ‘ஆனாலும் பணத்தை வைத்துவிட்டு’.. நெகிழ வைத்த பேக்கரி கடையும் மக்களின் மனிதமும்!
- '2000 பேர்' பங்கேற்ற 'மத நிகழ்ச்சி'... '200' பேருக்கு 'வைரஸ் தொற்று'... 'தமிழகத்திலிருந்து' பங்கேற்ற '82 பேருக்கு' அறிகுறி...
- கோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி?'... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்!
- 'ஆம்புலன்ஸ்' மூலம் 'கோவைக்குள்' நுழையும் 'மக்கள்'... 'தங்களைத்' தாங்களே 'கடத்திக்' கொள்ளும் 'விநோதம்..'. "லாக் டவுனுக்கு மரியாதையே இல்லை..." 'திணறும்' அதிகாரிகள்...
- 'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!
- 3 ‘தமிழக’ மாவட்டங்கள் உட்பட... நாடு முழுவதும் ‘75 மாவட்டங்கள்’... ‘மார்ச் 31’ வரை முற்றிலும் ‘முடக்கம்’...
- ‘கொரோனாவா? அதெல்லாம் ஆத்தா பாத்துக்குவா!’.. ‘வேப்பிலைத் தோரணத்துடன்’ சுற்றும் மாநகர பேருந்துகள்!
- ‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..!