கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்தப் பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.. எச்சரித்த வெதர்மேன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 1) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில் நாளை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதனை கருத்தில்கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறையை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், பெரும் மேகங்கள் சென்னை மாநகருக்குள் நகர்வதால் பெருமழை பெய்யலாம் எனவும், மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,"சென்னையின் நகருக்குள் பெரும் மேகங்கள் நகரும்பட்சத்தில் மிக கனமழையினை எதிர்பார்க்கலாம். மழையின் தீவிரம் மிக அதிகமாக இருக்கும் என்பதால், தயவுசெய்து வீட்டிற்குள்ளேயே இருங்கள் மற்றும் சாலைகளில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். வடசென்னை மற்றும் வடமேற்கு சென்னை பல இடங்களில் ஏற்கனவே நூற்றாண்டு காணாத மழை பெய்துள்ளது. கடலில் இன்னும் மழை மேகங்கள் உருவாகி அவை நகருக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று இரவு மற்றும் நாளையும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
ஒரே இடத்தில் கூடிய 178 பேர்.. எல்லாரோட பெயர்ல இருந்த Common விஷயம்.. "கின்னஸ் சாதனையே படைச்சுடுச்சு"
தொடர்புடைய செய்திகள்
- 2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..
- 24,679 வைரங்கள்.. 3 மாச உழைப்பு.. சென்னை மாலில் கின்னஸ் சாதனை படைச்ச வைர மோதிரம்.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்!!
- நொடியில் பறந்து போன கோழி... புதுவீட்டுக்கு திருஷ்டி கழிக்கச் சென்ற தொழிலாளி பலி .!!
- 200 வருசத்துல முதல் முறை.. மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. அமைச்சர் முன் ஜோராக நடந்த திருமணம்!!..
- ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?.. பெருங்களத்தூர தாண்டல ஜானு .. சென்னை டிராஃபிக்கில் தீபாவளி வெளியூர் பயணம்.. பறக்கும் மீம்ஸ்.
- “வேலை செய்ற இடத்துல இனி இவங்களுக்கு இந்த வசதிலாம் இருக்கணும்!".. மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு.!
- "தீபாவளி ஸ்பெஷலா".. ஊழியர்களுக்கு இப்டி ஒரு பரிசா??.. வியந்து பார்க்க வைத்த சென்னை தொழிலதிபர்!!
- "கெஞ்சுனேன்.. கதறி அழுதேன்!".. குரூர மனநிலைக்கு போன சதீஷ்..? மாணவி கொலை விசாரணையில் பகீர் தகவல்.!
- ரயில் நிலையத்தில்.. துடிதுடித்து உயிரிழந்த பெண்ணின் தந்தையும் மரணம் .. சென்னையை உலுக்கிய சோகம்!!
- அப்பா, அம்மாவை பாத்துக்க முடியலைன்னா அவங்க கொடுத்த சொத்து எதுக்கு?.. முதியோர் இல்லத்தில் தவித்த பெற்றோர்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!