‘நீண்ட நேரமாக திறக்காத கதவு’... ‘அடுத்த வாரம் கல்யாணம்’... ‘பள்ளி ஆசிரியையின் துயர முடிவு’... ‘சோகத்தில் மூழ்கிய பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுவையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை காமராஜர் சாலை சாரதிநகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்த சண்முகம் என்பவர், காமராஜர் சாலையில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் லட்சுமி (23). இவர் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து திருமண நிச்சயம் செய்தனர்.

வருகிற 27-ந்தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பெற்றோர் செய்து வந்தனர். ஆனால் பள்ளி ஆசிரியை லட்சுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை லட்சுமி வீட்டின் கழிவறைக்கு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கழிப்பறையின் கதவை உடைத்து பார்த்த போது லட்சுமி இரும்பு கம்பியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண ஏற்பாடு நடைபெற்று வந்தநிலையில் மகளை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்த உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

SUICIDEATTEMPT, PUDUCHERRY, SUICIDE, SCHOOL, TEACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்