பிறந்தநாள் பார்ட்டி.. வகுப்பறைக்கு 'பீர்' பாட்டில்களுடன் வந்த மாணவி..ஆசிரியர் 'திட்டியதால்' தற்கொலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது பிறந்தநாளுக்கு பீர் பாட்டில்களுடன் வந்த மாணவியை ஆசிரியர் திட்டியதால், மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சேலம் பகுதியை அதிர வைத்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,'' சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் கல்பனா. (பெயர் மாற்றம்). இவர் நங்கவள்ளியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்தார். கடந்த 15-ம் தேதி கல்பனாவுக்குப் பிறந்தநாள் என்பதால் பீர் பாட்டில்களை வாங்கிவந்து வகுப்பறையில் அனைத்து மாணவிகளிடமும் காட்டியிருக்கிறார்.
அப்போது வகுப்பு ஆசிரியர் வர, கல்பனாவுடன் சேர்ந்து 5 மாணவிகளும் மாட்டிக்கொண்டனர். இதுகுறித்து வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்க, கல்பனாவுக்கு பிறந்தநாள் என்பதால் எங்களுக்கு பார்ட்டி கொடுக்க பீர் பாட்டில்களுடன் வந்தாள் என தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கல்பனாவின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து அவர்கள் முன்னால் கல்பனாவை ஆசிரியர்கள் மோசமாகத் திட்டியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்பனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் இரவோடு இரவாக அவரது உடலை எரித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி விஏஓ காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, தற்போது போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இலவச WiFi வசதி'... 'எந்த மாவட்டத்தில் தெரியுமா?'... விவரம் உள்ளே!
- ‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!
- ‘அதிவேகத்தில், பேருந்தை முந்தமுயன்று’... ‘தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து’... ‘அலறித்துடித்த பயணிகள்’... ‘தலைக்கீழாக கவிழ்ந்து நடந்த விபத்து’!
- 'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'!
- 'அசுர வேகத்தில் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள்'.. 'அலறித் துடித்த மாணவிகள்'.. 30க்கும் மேற்பட்டோரின் பரிதாப நிலை!
- ‘பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில்’... ‘காருக்குள்ளேயே’... ‘இளம் காதலர்களின் கோர முடிவால்’... ‘கதிகலங்கி நிற்கும் பெற்றோர்'!
- ‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..