'உன்ன விடமாட்டேன்'...'புறா'விற்காக '100 அடி' ஆழக் கிணற்றில் விழுந்த சிறுவன்'...பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புறாவை துரத்தி சென்று 10-ம் வகுப்பு மாணவன் 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது புறா ஒன்று அந்த பகுதியில் வந்து அமர்ந்துள்ளது.
அப்போது அதனை பிடிக்க கார்த்திக் முயற்சிக்க அது பறந்து சென்றுள்ளது. இருப்பினும் அதனை விட கூடாது எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், புறாவை கார்த்திக் துரத்தியுள்ளார். தனது முழு கவனமும் மேலே சென்று கொண்டிருந்த புறாவிடம் இருக்க, கீழே இருந்த கிணறை கவனிக்க தவறிய கார்த்திக் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்தார். அது 100 அடி ஆழ கிணறு என்பதனால் பதறி போன அவரது நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர், ஒரு மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்டனர். புறாவை துரத்தி சென்று சிறுவன் 100 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!
- ‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘லாரி மீது மோதி கோர விபத்து’.. ‘ரேஸ் மோகத்தால் இளைஞர்களுக்கு நடந்த பயங்கரம்’..
- 'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'!
- 2020-ம் ஆண்டு 'விடுமுறை' நாட்கள் அறிவிப்பு.. ஆனா அதுலேயும்.. ஒரு 'திகில்' சம்பவம் இருக்கு!
- ‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..
- கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!
- ‘அசுர வேகத்தில் திரும்பிய பேருந்து’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘தூக்கி எறியப்பட்ட பெண்’... 'பதற வைக்கும் வீடியோ'!
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- நீயெல்லாம் என்ன எதுத்து பேசுறியா?..தீண்டாமையால்.. சக மாணவனின் முதுகை பிளேடால் கிழித்த மாணவன்!
- 'பண்டிகை'யை கொண்டாடுங்க... தீபாவளிக்கு.. ஒருநாள் 'எக்ஸ்டிரா' லீவ்!