தேனி அருகே அரசுப் பள்ளி மாணவர்களிடையே நடைப்பெற்ற மோதலில், மூன்று மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கும் இடையே, ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று, இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, 10-ம் வகுப்பு மாணவனும், அவனது நண்பர்களும் சேர்ந்து, 12-ம் வகுப்பு மாணவவனைத் தாக்கினர்.
இதனைத் தடுக்க முயன்ற, அவனது நண்பர்களையும் கத்தியால் குத்தி விட்டு 4 பேரும் தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த 12-ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட 3 மாணவர்களையும், ஆசிரியர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 10-வகுப்பு மாணவனையும், அவர் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மிருகமாக மாறிய கல்லூரி மாணவர்கள்'...'கொலைவெறித் தாக்குதல்'... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
- அரசு பள்ளி பால்கனி இடிந்து 3 மாணவரகள் மீது விழுந்த சோகம்..! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- ‘10 நிமிஷம் லேட் அதுக்குனு இப்டியா அடிப்பீங்க’.. ‘வலியால் துடிதுடித்த மாணவர்கள்’.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!
- ‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்!
- 'பஸ் டே கொண்டாட்டம்'... 'ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்'!
- ‘அட இதல்லவா மனிதநேயம்’!.. தொழிலதிபரின் அதிரடி முடிவால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள்! நெகிழ வைக்கும் காரணம்!
- ரயில் தாமதம்: நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகா மாணவர்கள்.. மறுவாய்ப்பு வழங்கியது மத்திய அரசு!
- “90ஸ் கிட்ஸோட கண்ணீர், உங்கள சும்மா விடாது பாஸ்”.. வைரலாகும் வீடியோ!
- மேற்கு வங்கத்தில் வன்முறை.. வாக்குப்பதிவின்போது கலவரம்.. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!
- அரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்!