'நான் கர்ப்பமா இருக்கேன்'...'கதறிய காதலி'... 'ஆனா நான் ஜாலியா மண மேடையில் இருப்பேன்'... 'கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்'... ஆடிப்போன இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்படிக்கின்ற வயதில் படிப்பை மறந்து காதல் என்று செல்லும் சிறுமிகளை இளைஞர்கள் சிலர் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்து விவரிக்கிறது, இந்த செய்திக் குறிப்பு.
மதுரை மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 21 வயது இளைஞரான இவருக்கும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமி 10ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த சிறுமி 18 வயதைத் தாண்டவில்லை என்பது தெரிந்தும் அந்த இளைஞர் சிறுமியைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன், நாம் இருவரும் சந்தோசமாக வாழலாம் என ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டுள்ளார். அதை அனைத்தையும் உண்மை என நம்பிய அந்த சிறுமி, உதயகுமாருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். இதை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்ட அவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பிணியான நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக உதயகுமாரிடம் கூறியுள்ளார்.
மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு உதயகுமாரிடம் வற்புறுத்தியுள்ளார். அப்போது தான் உதயகுமார் தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளார். திருமணம் செய்துகொள்ள முடியாது என அவர் கூறியதோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று உதயகுமாருக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்ற தகவல் அந்த சிறுமிக்குத் தெரியவந்தது.
இதனைக் கேட்டு அதிர்ந்துபோன அந்த சிறுமி, மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதயகுமார் மீது புகார் அளித்தார். இதனால் உடனடியாக நிலக்கோட்டை சென்ற மகளிர் போலீசார் திருமண மண்டபத்திலேயே மணமகன் உதயகுமாரை மடக்கி விசாரணை நடத்தியதில் மணமகன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். உதயகுமாரால் தற்போது இரண்டு பெண்களின் வாழ்க்கை வீணானது தான் மிச்சம்.
படிக்கின்ற வயதில் படிப்பு மற்றும் விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்திக் கொள்ளாமல், இது போன்ற நபர்களிடம் சிக்கி சிறுமியினர் வாழ்க்கையைத் தொலைப்பது வேதனையாக இருக்கிறது என கூறும் போலீசார், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்கள் தவறான பாதையில் சென்றால் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தடுப்பூசி' கண்டுபுடிக்குற வரைக்கும்... பள்ளிக்கூடம் 'தெறக்க' மாட்டோம்... அதிரடியாக அறிவித்த நாடு!
- "2வது வீட்டுக்காரன் ஓடிட்டான்.. வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் 20 ஆயிரம்.. படிக்கலனா பரவால்ல.. எக்ஸாம்க்கு வந்து கொரோனா வந்தா?".. கதறும் பெண்!
- "10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா!".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்!
- 'டெஸ்டிங்க்கு போன லேப்- டாப்'... 'மீண்டும் கிக் ஸ்டார்ட் ஆன காசியின் வழக்கு'... என்னவெல்லாம் வெளியாகும்?
- ரூ.15 கோடிக்கு ‘லாலிபாப்’ திட்டமிட்ட மடகாஸ்கர் ‘மந்திரி’.. மிரள வைத்த ‘காரணம்’!
- 'ஒன் சைடாக லவ்' பண்ற பொண்ணு வீட்டுக்கு போய்... காதலை வெளிப்படுத்திய இளைஞன்!.. குடும்பமே சேர்ந்து... நெஞ்சை பதபதைக்க வைக்கும் அசாத்திய வன்முறை!
- இந்தியா முழுவதும்... பள்ளி, கல்லூரிகள் 'மீண்டும்' எப்போது திறக்கப்படும்?
- 'ஸ்கூல் பொண்ணு கூட காதல்'... 'திடீரென நடந்த பிரேக் அப்'... 'ஒண்ணும் புரியாமல் மாணவி வீட்டிற்கு போன இளைஞர்'... அரங்கேறிய கொடூரம்!
- ‘அம்மா இல்லாத குழந்தை’!.. காய்ச்சலால் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை.. சென்னையை அதிரவைத்த ‘ஆன்லைன்’ புகார்..!
- உயிருக்கு போராடிய 'தம்பியை' காப்பாற்ற... 10 வயது 'சிறுமி' செய்த காரியம்... கடைசி வரை 'போராடிய' மருத்துவர்கள்... நெஞ்சை ரணமாக்கிய சோகம்!