"ஸ்கூலுக்கு போக கஷ்டமா இருக்கு.. எதாவது உதவி செய்ங்க சிஎம் சார்"..கோரிக்கை வைத்த மாணவி.. MLA கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி அருகே கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பள்ளி மாணவி ஒருவர் தனக்கு உதவி செய்யும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் அப்பகுதி சட்ட மன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அந்த மாணவிக்கு ஓடிச் சென்று உதவி இருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
உதவி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கீழ்பாடி கிராமம். இப்பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி சந்தியா. இவர் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில், மாற்றுத் திறனாளியான தன்னால் பள்ளிக்கு சென்று வருவது சிரமமாக இருக்கிறது என்றும் தனக்கு நாற்காலி ஸ்கூட்டரை வழங்கினால் தன்னால் பிற குழந்தைகளை போல எளிதில் பள்ளிக்குச் சென்றுவர முடியும் என்பதால் ஸ்கூட்டர் வழங்கி உதவும்படி கோரிக்கை வைத்து இருந்தார்.
ஓடிவந்த எம்எல்ஏ
இதனை அடுத்து சந்தியாவின் நிலையை அறிந்த கீழ்பாடி கிராமம் அமைந்துள்ள ரிஷிவந்தியம் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரான வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதி நவீன நான்கு சக்கர வாகனத்தை மாற்றுத் திறனாளி மாணவிக்கு வழங்கி இருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன்.
மேலும், "நன்றாக படிக்க வேண்டும்" எனவும் வசந்தம் கார்த்திகேயன் சந்தியாவிற்கு அறிவுரை வழங்கினார்.
மகிழ்ச்சியில் சந்தியா
தனது கோரிக்கையை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை தனக்கு வழங்கியதற்கு நன்றி சொன்னார் சந்தியா. புது வாகனத்தை ஆர்வத்துடன் இயக்கிப் பார்த்த மாணவி சந்தியா தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
மாற்றுத் திறனாளி மாணவி உதவி செய்யும்படி கோரிக்கை வைத்ததும் அப்பகுதி சட்ட மன்ற உறுப்பினர் நேரடியாக சென்று அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை அவருக்கு வழங்கி இருப்பது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாடு முழுவதும் இந்த திட்டம் சட்டமாகணும்" திருமண விழாவில் விருப்பத்தை உடைத்து சொன்ன முதல்வர்..!
- தைரியமா இரும்மா.. உக்ரைனில் இருக்கும் மகளிடம் பேசிய அப்பா.. நெஞ்சை உருக செய்யும் உரையாடல்
- "கேக்க மாட்டீங்க".. மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் பொசுக்கிய ஆசிரியர்.. காட்டுத்தீயாக பரவும் வீடியோ..!
- திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.. கள்ளக்குறிச்சியில் ஒட்டு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்திய அதிகாரிகள்..!
- பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்
- 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வி துறை போட்ட முக்கிய உத்தரவு
- தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாப்பிற்காக.. இஸ்ரேல் தயாரித்துள்ள அதிநவீன `எக்ஸ் 95’ துப்பாக்கி.. என்ன ஸ்பெஷல்?
- மனைவியின் ஆவி புகுந்ததா? மனைவி குரலில் கணவன் சொன்ன விஷயம்.. கடைசியில் கிணற்றுக்குள் காத்திருந்த அதிர்ச்சி
- பொங்கல் தொகுப்பு ஊழல் புகார்.. அதிகாரிகள்.. நிறுவனங்கள் மீது பாயப்போகும் கடும் ஆக்ஷ்ன்.. ஸ்டாலின் உத்தரவு
- பெரு முதலாளிகளின் இடத்தில் கை வைக்குமா அரசு? - ஏழைகளின் வீடு ஆக்கிரமிப்பா? - சீமான் கேள்வி