'P.E.T பீரியட்ல விளையாடவே விட மாட்றாங்க சார்..' விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் சொன்ன மாணவி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தங்களது கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்திருக்கின்றனர். அப்போது. மாணவி ஒருவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | செல்போனை தூக்கிட்டு ஓட நெனைச்ச திருடன்.. ஷாக் ஆன உரிமையாளர்.. கடைசியா நடந்ததை அவரே எதிர்பார்க்கல.. வீடியோ.!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார். இதனிடையே, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், நேற்று ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திரா மாநிலம் குண்டூரில் வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை மத்திய அரசின் ஏகலைவா மாதிரி பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பங்கேற்க தமிழக மாணவர்கள் இன்று ஆந்திரா செல்ல இருக்கின்றனர். அம்மாணவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

அப்போது, ஒரு பள்ளி மாணவி,"PET பீரியட்ல விளையாட மட்டும் அனுமதிச்சா நல்லா இருக்கும். அந்த பீரியட்லயும் மத்த பாடங்களை நடத்துறாங்க" என புன்னகையுடன் சொல்ல, சக மாணவர்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"சரிம்மா கண்டிப்பா நிறைவேற்றுவோம். இதுபற்றி துறை சார்ந்த அதிகாரிகள் கிட்ட பேசுறேன்" என்றார். மேலும், அங்கு வந்திருந்த மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Also Read | பெற்றோர் வர தாமதம் .. சாலையில் தனியாக காத்திருந்த மாணவி.. நெகிழ வைத்த காவல்துறை அதிகாரியின் செயல்..!

SCHOOL GIRL, COMPLAINTS, MINISTER UDHAYANIDHI STALIN, PET PERIOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்