குழந்தைகளுக்கு தமிழில் பெயர்.. பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் மா.சுப்ரணியன்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும் என தமிழக குடும்ப மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
வளைகாப்பு நிகழ்ச்சி
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 285 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் இந்த விழாவை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பொருட்களை வழங்கினர். தடுப்பூசிகளின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து இந்த நிகழ்ச்சியின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பூ, பழம், மஞ்சள், கண்ணாடி தட்டு அடங்கிய வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன.
தமிழில் பெயர்
இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும் எனவும் இது கட்டாய இல்லை என்றும் இதனை வேண்டுகோளாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. இதற்கான பெயர் பட்டியலை பேராசிரியர் நன்னன் தயாரித்து கொடுத்தார். இங்கு கலந்துகொண்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அடுத்த ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு குழந்தைகளுக்கான முதலாண்டு பள்ளி கல்வி கட்டணமும் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகளை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கலைஞர் கணினி கல்வி மையம் மேற்கொள்ளும்" என்றார்.
வேண்டுகோள்
மேலும், விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் முடிந்தவுடன் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? என கேட்க இருப்பதாகவும், பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களின் விருப்பம் எனவும் ஆகவே தான் கட்டாயப்படுத்தவில்லை என்றும் இதனை வேண்டுகோளாக முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய கீதா ஜீவன்," பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கர்ப்பிணிகள் ஒருநாளைக்கு 5 முறை சாப்பிட வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம். உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கும் பெண்களும் இந்த எண்ணினை தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 நாள்ல 4 பேரு.. மொத்த படையையும் களத்துல இறக்குன போலீஸ்.. விசாரணைல இளைஞர் சொன்ன விஷயம்.. எல்லாரும் ஒருநிமிஷம் ஆடிப்போய்ட்டாங்க..!
- "என் Friend எந்திரிக்கவே இல்ல.. ரூம்ல பாம்பு இருக்கு..சீக்கிரம் வாங்க"..போலீசுக்கு போன் செஞ்ச நபர்.. உண்மையை போட்டு உடைத்த டாக்டர்கள்..!
- பரீட்சை எழுதுன 9 லட்சம் பேர்ல தமிழ்-ல 100க்கு 100 மார்க் எடுத்த எடுத்த ஒரே மாணவி.. குவியும் பாராட்டுகள்..!
- "1 கிலோ கொறச்சா 1000 கோடி ஒதுக்குறேன்னு சொன்னாங்க.. இப்போ நான் தான் மிகவும் பணக்கார அமைச்சர்".. சொன்னதை செஞ்சு காட்டிய MP..!
- "உலகத்துல பழமையான மொழி தமிழ்தான்..எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன்".. வியக்க வைக்கும் அமெரிக்க நபர்..!
- தள்ளுவண்டில காய்கறி விற்கும் அப்பா.. கல்வியால் கஷ்டத்தை உடைத்தெறிந்த இளம் பெண்..!
- "வறுமை காரணமாதான் இந்த வேலைக்கு வந்தேன்".. சுரங்க தொழிலாளிக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..ஒரே நாளில் மாறிய வாழ்க்கை..!
- "உணவு பொருள் வாங்கக்கூட மக்கள் வரிசையில் நிற்பது கவலையளிக்கிறது".. ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர்..!
- 320 அப்ளிகேஷன்களுக்கு ஆப்பு.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சொன்ன தகவல்..!
- "நான் ஏன் தமிழன்?"... முதல்வர் ஸ்டாலின் நூல் வெளியிட்டு விழாவில் ராகுல்காந்தி உணர்ச்சி பொங்க பேச்சு..!