‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிகளுக்கு ஜாதியை குறிக்கும் வகையில் கைகளில் கயிறு கட்டி வரும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜாதி வாரியாக கைகளில் கயிறு கட்டிக்கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, காவி நிறங்களில் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மாணவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்தது.
கடந்த 2018 -ம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில், மாணவர்கள் கைகளில் கயிறு கட்டிவருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் தலைமை கல்வி அலுவலர், இதுபோன்று நடைபெறும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள்'... 'தமிழக அரசு அதிரடி'!
- ‘கல்லூரி மாணவர்களை குறிவைத்து’... ‘இளைஞர்கள் செய்யும் அதிர்ச்சி காரியம்’... 'வலைவீசிய போலீஸ்'!
- ‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘தமிழகத்தில் முக்கிய இடங்களில்’... ‘பாதுகாப்பு அதிகரிப்பு’... காரணம் இதுதான்!
- 'கற்களால் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்'... பதறியடித்து ஓடிய பயணிகள்... 'சென்னை மின்சார ரயிலில் நடந்த சோகம்'!
- 30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோள்..! அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்..!
- ‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’
- ‘பள்ளிக்குள் கண்டித்த ஆசிரியர்..’ வெளியே வந்ததும்.. ‘மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- 'சின்ன வயசுல இருந்தே'... 'ரொம்ப ஆச பட்டா சார்'.. 'ஆனா இந்த முடிவ எடுப்பான்னு நினைக்கல!
- ‘அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் இது ஃப்ரீ’.. தமிழக அரசு அசத்தல்..!