'8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்'... பள்ளி கல்வித்துறை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களை தோல்வி அடைய செய்யக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தது. இதில் திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்தப் புதிய உத்தரவு குறித்து தமிழக அரசு அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்வில் தோல்வி அடைய செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த உத்தரவை  மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9-ம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்கள் ஜூன் 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை உடனடித் தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCHOOL, EDUCATION, GOV, EXAMS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்