"மளமளவென சரிந்து விழுந்த தொடக்கப்பள்ளி!"... கதிகலங்கிப்போன 32 குழந்தைகளின் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வால்பாறை அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையின் அருகாமையில் அமைந்துள்ளது, காஞ்சமலை தேயிலைத் தோட்டம். அங்கு இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், 32 மாணவர்கள் படித்து வருகின்றனர். 62 ஆண்டுகள் பழமையான அந்த பள்ளிக்கட்டடம் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆதலால், கட்டடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அங்கு பயிலும் மாணவர்கள், மதிய உணவுக்காக பள்ளியின் அருகாமையில் உள்ள உணவு கூடத்திற்கு நேற்று மதியம் சென்றுள்ளனர். யாரும் எதிர்பாராத விதமாக பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குழந்தைகள் யாரும் அந்த கட்டடத்தில் இல்லாத போது இது நிகழ்ந்துள்ளது. ஆனால், பள்ளியில் இருந்த பீரோ, மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் 'பள்ளிகளுக்கு' விடுமுறையை 'நீட்டித்து' அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை முடிவு..
- உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற பெண் குழந்தைகள்... ஏரியில் குளிக்கப் போய்... சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
- நேருக்கு ‘நேர்’ மோதிக்கொண்ட ‘லாரி - பேருந்து’... கோர விபத்தில் 7 ‘குழந்தைகள்’ உட்பட ‘21 பேர்’ பலியான பரிதாபம்...
- '11 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியை சுகந்தி'.. 9 குழந்தைகளுடன் மூழ்கிய சோகம்.. 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
- 'கைகளை நீட்டி.. ஏங்கும் 'கருப்பின' குழந்தை!.. 'நிறவெறி காட்டிய உணவக ஊழியர்?!' .. கலங்கவைக்கும் வீடியோ!
- ‘தொடர் கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- ‘ட்ரெயினிங் இடைவேளையில்’... ‘நாகின் டான்ஸ் ஆடிய'... ‘கவர்மென்ட் டீச்சர்ஸ்’... ‘வைரலான வீடியோவால் நடந்த சோகம்’!
- ‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..
- ‘சொத்து சேர்க்கல’... ‘4 பிள்ளைகள் இருந்தும்’... ‘வயதான தாயை’... ‘வீதியில் கொண்டுபோய் விட்ட கொடூரம்’!
- ‘சண்டை வேண்டாம்’... ‘கெஞ்சிய குழந்தைகள் கண் முன்னே’... ‘உறவினர் மகனால்’... 'தாய்க்கு நேர்ந்த கொடூரம்’!