சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு வெறும் 3 மணி நேரத்தில் செல்லும் வகையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. இதற்காக ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 277 கி.மீ. தொலைவு கொண்ட இந்த சாலை கட்டமைப்புக்கு வேண்டி காஞ்சிபுரம், சேலம், தரும்பரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், விவசாய நிலங்களை கையகப்படுத்தவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் எட்டு வழிசாலை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு வரும் ஜூன் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGYWAY, GOVERNMENT, SALEM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்