'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண்ணை இணைப்பது குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த முக்கிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை என்ற திட்டத்தின்கீழ், கொண்டுவரப்பட்ட ஆதார், எல்லாவற்றோடும் இணைக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இருப்பினும் வருமான வரிக்கான பான், வங்கிக் கணக்கு, சிம் கார்டு உள்ளிட்டவைகளில், ஆதார் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில், மோசடிகளை தடுக்க, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் அஸ்வினி குமார் என்பவர், பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்ததார்.
அந்த மனுவில், ஆன்லைன் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவில் பிடிக்க, சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், எல்லா வழக்குகளையும் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதிகள் கூறினர்.
வேண்டுமெனில், சென்னை உயர்நீதிமன்றத்தில், நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரரிடம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பின்னர், சமூக வலைத்தள கணக்குகளுடன், ஆதாரை இணைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'குத்துயிரும் குலையுயுருமாய் கர்ப்பிணி பெண்'.. பேஸ்புக் காதலனின் முடிவு.. பதறவைத்த சோக சம்பவம்!
- '4 மாச பேஸ்புக் நண்பர்கள்'.. எதேச்சையான முதல் சந்திப்பு.. '4 மணி நேரத்தில் நடந்த சுவாரஸ்யம்'!
- ‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து’.. ‘டெல்லி திரும்பிய மோடி’.. ‘ட்விட்டரில் ட்ரெண்டாகும் #DontGoBackModi’..
- 'என்ன பாத்து கத்துக்கோங்க'...'செருப்பால் அடிக்காமல் அடித்த குரங்கு'...உருகவைக்கும் வைரல் வீடியோ!
- 'நம்ம பீச்'...'நாமதான் பாத்துக்கணும்'...'வாக்கிங்' போற நேரத்துல மாஸ் காட்டிய பிரதமர்'...வைரலாகும் வீடியோ!
- வேஷ்டி சட்டையில் மோடி | Video: Dhoti Clad Modi Welcomes Xi JinPing at Chennai's Mamallapuram!
- ‘13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..