'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக் டாக் செயலி ஆபாசம், கலாச்சார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினார். இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி சில நாட்கள் முன்னர் 'டிக் டாக்' செயலிக்கு தடை விதித்திருந்தது.
டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதையும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆணை டிக் டாக் ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிடுவது, ஒளிபரப்புவதையும் தடை செய்யும் விதத்தில் இருந்தது. ஏப்ரல் 16-க்குள் தடை செய்ய மத்திய அரசினை, உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. நீதிமன்றம் டிக்டாக் “ஆபத்தான அம்சம்” மற்றும் “பொருத்தமற்ற உள்ளடக்கத்தைக்” கொண்டுள்ளதாக கூறியிருந்தது.
டிக் டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. டிக்டாக் ஆப் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதள வீடியோ ஆப்பாக தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் இதன் தரவிறக்கம் ஒரு பில்லியனை எட்டியது. “நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக் டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தடையை நீக்குமாறு சீன நிறுவனமான 'டிக் டாக்' உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
டிக் டாக்கை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். இந்த வழக்கில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க, உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 -ம் தேதிக்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துப்பாக்கி வெடித்ததால்.. நண்பன் பலி'.. 'டிக் டாக்' வீடியோ விபரீதம்!
- மீண்டும் களத்தில் பொன். மாணிக்கவேல்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- ரஃபேல் வழக்கு: மத்திய அரசு கோரிக்கை.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- தஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு!
- சேலம் எட்டு வழிச் சாலை.. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
- 'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- அரசுப் பேருந்தில் சாகசம்... தலைகீழாகத் தொங்கும் மாணவர்கள்... உறைய வைக்கும் காட்சிகள்!
- அஞ்சு மரக்கன்றுகளை நட்டா, அரஸ்ட் வாரண்ட் கேன்சல்.. வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்!
- ரஃபேல் விவகாரம் தொடர்பான ‘முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன’.. மத்திய அரசு!