'இது என்ன பா புது பிரச்சனை'... 'SBI, HDFC, ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்'... காரணம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடுத்த ஆறு நாட்களில் தங்களின் ஓடிபி (OTP)  சேவையில் சிக்கலைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வங்கிகளைப் பொறுத்தவரை மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை, மார்ச் 30 ஆம் தேதியைத் தவிர்த்து அடுத்தடுத்து ஏழு நாட்களுக்குச் செயல்படாது. இந்த நாட்களில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் ஓடிபியில் சிக்கலைச் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

வங்கி மோசடிகள் என்பது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மோசடிகளிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கவும், வணிகச் செய்திகளைக் கட்டுப்படுத்தவும், ஒரு செயல்முறையைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வங்கிகளை, அதன் வாடிக்கையாளர்களை அடைய எஸ்.எம்.எஸ் முறையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது.

ஆனால் பல வங்கிகள் இந்த கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. அண்மையில் ஆணையம் தங்களின் வழிமுறையைப் பின்பற்றாத 40 நிறுவனங்களின் பட்டியலை அறிவித்தது. அதில் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கிகள் இடம்பெற்றிருந்தன. அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆணையத்தின் வழிமுறைகளை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து நிறுவனங்கள் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் ஒடிபியில் சிக்கலைச் சந்திப்பர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகையால் எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒடிபியை பெறுவதில் சிக்கலைச் சந்திக்க நேரிடலாம் எனத் தெரியவருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்