'பொது இடத்துல சார்ஜ் போடுறீங்களா'?...'இப்படி கூட நடக்கலாம்'...வெளியான பகீர் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொது இடங்களில் செல்போனை அங்குள்ள சார்ஜர் அவுட்லெட்கள் மூலம் சார்ஜ் செய்யும் போது, தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.

செல்போன்களை சார்ஜ் செய்வதற்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்கப்பட்டிருக்கும். சில சார்ஜிங் ஸ்டேஷன்களில் USB கேபிளுடன் சார்ஜர் அமைந்திக்கும். அதில் தாங்கள் கொண்டு வரும் மொபைலை அந்த சார்ஜர் பாய்ண்ட்டுடன் இணைத்து சார்ஜ் போடுவது சிலரின் வழக்கம்.

இந்நிலையில் அவ்வாறு  சார்ஜ் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை என்று எஸ்.பி.ஐ வங்கி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.  USB கேபிள் உடன் இணைந்த சார்ஜரை பயன்படுத்தும் போது, நம்முடைய செல்போனில் இருக்கும் வங்கிக்கணக்கு, பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடுபோக வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை செய்கிறது அந்த வீடியோ.

அவ்வாறு வங்கிக்கணக்கு தகவல்கள் திருடப்பட்டால், கணக்கில் இருக்கும் பணம் திருடப்படும் வாய்ப்பு கண்டிப்பாக இருப்பதாகவும் வீடியோவில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்ய, சொந்த சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என்று எந்த வீடியோ எச்சரிக்கை செய்கிறது.

மேலும் USB கேபிள் சார்ஜரின் மற்றொரு முனையில் எந்த ஒரு தொடர்பு சாதனமும் இணைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு சார்ஜ் போடலாம் என அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SBI, CHARGING STATIONS, MOBILE PHONE, HACKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்