சவுக்கு சங்கரின் சிறைத்தண்டனைக்கு எதிராக போடப்பட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நீதித்துறையை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டதாக சவுக்கு சங்கர் மீது தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணையில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், B.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்திருந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சவுக்கு சங்கர். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.
மேலும், மனு மீதான விசாரணையின்போது விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதற்கும் ஒரு வழிமுறை இருப்பதாகவும் அதன்படியே விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரணை நடைபெறும் வரை சவுக்கு சங்கர் இந்த வழக்கு குறித்து எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், டுவிட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read | இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் பிரதமர் போட்ட பரபர ட்வீட்.. T20WC2022
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலை வழக்கு .. உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.. தமிழக அரசு கொடுத்த மனு.. முழு விபரம்..!
- "எல்லா பொண்ணுங்களும்"... கருக்கலைப்பு விஷயத்தில்.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு!!
- Savukku Shankar : அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை? - உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
- "அந்த உரிமை பெத்த அம்மாவுக்கு மட்டும் தான் உண்டு".. பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு..!
- தவறாக போடப்பட்ட ஊசி.. 22 வருசத்துக்கு அப்புறம் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு..
- மே 18-ல் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன்.. செய்தியாளர்களிடம் பேசிய முதல் வார்த்தை..
- "என் மனைவி பெண்ணே கிடையாது".. உச்ச நீதிமன்றத்தில் கணவர் கொடுத்த வித்தியாசமான விவாகரத்து மனு..!
- “பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த ஆவணமும் இல்லாம இதை வழங்க வேண்டும்!” - உச்ச நீதிமன்றம் அதிரடி..!
- மாத சம்பளம் வாங்குவோருக்கு குட்நியூஸ்.. ரூ.9000 வரை பென்சன் உயரலாம்.. முழு விவரம் இதோ!
- அவங்க கேட்பதை கொடுங்க... ஆதார், ரேஷன் கார்டு தேவையில்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி