சாத்தான்குளம் அருகே மீண்டும் பயங்கரம்!.. கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!.. உறவினர்கள் போராட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காரில் கடத்தி சென்று லாரி ஓட்டுனர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையின் தூண்டுதலாலே கொலை நடந்துள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தண்ணீர் லாரி ஓட்டி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. செல்வத்துக்கும் அவரின் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக இருதரப்பினருக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் இது தொடர்பாக செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். தட்டார்மடம் காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் எதிர்தரப்புக்கு சாதாகமாக செயல்பட்டு வந்ததாகவும் செல்வம் நீதிபதியிடத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செல்வம் நேற்று மோட்டார் சைக்கிளில் கொழுந்தட்டு விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரைக் கடத்திச் சென்றது. பொதுமக்கள் இது குறித்து தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றியதுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே , செல்வத்தைக் காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல் அவரைக் கட்டையால் அடித்து குற்றுயிரும் குலைஉயிருமாக சாத்தான்குளம் அருகே காட்டுப்பகுதியில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். உயிருக்குப் போராடிய செல்வத்தை பொதுமக்கள் மீட்டு திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
செல்வத்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப போலீஸார் முயன்ற போது, அவரின் உறவினர்கள் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் தூண்டுதலின் பேரில்தான் செல்வம் கொலை நடந்ததுள்ளது. எனவே, காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து திசையன்விளை காவல் நிலையத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வத்தின் உறவினர் திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது 107, 336, 302, மற்றும் 364 என்ற 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், செல்வம் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாத்தான்குளம் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், தற்போது மற்றோரு கொலை சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நம்பி வீட்ல தங்க வச்சோம்’!.. ‘10 நாள் கழிச்சு கிடைச்ச துப்பு’.. சென்னையை பரபரக்க வைத்த குழந்தை கடத்தல்..!
- ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லும் போது ‘ஆம்புலன்ஸுக்கு’ தீ வைத்த ரவுடி.. போலீஸ் ஸ்டேஷன் முன் நடந்த பரபரப்பு..!
- 20 நிமிஷம் 'போனில்' பிஸி!!.. விபத்து நோயாளிக்கு நேர்ந்த சோகம்!.. டாக்டருடன் அனல் பறக்க சண்டையிட்ட சப் இன்ஸ்பெக்டர்!
- மாலை மருந்து வாங்கிய ‘மெடிக்கலில்’ நள்ளிரவு ‘கைவரிசை’.. போலீஸில் கையும் களவுமாக சிக்க வைத்த ‘சமூக இடைவெளி கட்டை’!
- 'மகன் சொன்ன சாட்சியை நம்பி.. மனைவியை கொன்றதாக கணவரை கைது செய்த போலீஸார்!'.. 'எல்லாம்' முடிந்த பின் நடந்த 'பரபரப்பு' ட்விஸ்ட்!
- 'வெகேஷனுக்கு சென்று திரும்பி வந்த குடும்பம்!'.. குழந்தைகளின் 'படுக்கை' அறையில் கண்ட 'அதிர்ச்சி' காட்சி!.. அன்று 'இரவே' கணவர் கண்ட 'உறைய வைத்த' சம்பவம்!
- 'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்!
- 'உங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே அவர எனக்கு தெரியும்'... 'ட்விஸ்டை எதிர்பாக்காத கணவன்'... மனைவியின் பேஸ்புக் நண்பருக்கு நடந்த விபரீதம்!
- “மனைவி சொந்தப் படம் எடுக்கனும்!”.. சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகன்.. திட்டம் தீட்டிக் கொடுத்த சின்னத்திரை நடிகை!
- 'எக்ஸாம் ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி நடந்த சோதனை'... 'திடீரென கதறி அழுத மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!